Vanitha Vijayakumar: அடுத்த சீசன் பிக் பாஸ் போட்டியாளர் ரெடி போல.. 2வது மகளுடன் தாய்லாந்தில் வனிதா!

சென்னை: வனிதா விஜயகுமார் தனது இரண்டாவது மகள் ஜெய்னிதாவுடன் தாய்லாந்தில் சுற்றுலா சென்றுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 7ல் நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா போட்டியாளராக பங்கேற்றுள்ளார். பிக் பாஸ் சீசன் 3ல் வனிதா விஜயகுமார் போட்டியாளராக கலந்து கொண்ட நிலையில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு நடனம் ஆடினார்.

Vanitha Vijayakumar shares her Thailand tour photos gets trolled

பிக் பாஸில் ஜோவிகா: வத்திக்குச்சி வனிதா என செல்லமாக ரசிகர்களால் அழைக்கப்பட்டு வந்த வனிதா பிக் பாஸ் வீட்டில் மிரட்டியதை போல தற்போது அவரது மகள்ஜோவிகாவும் சக போட்டியாளர்களுக்கு செம டஃப் கொடுக்கும் விளையாட்டை விளையாடி வருகிறார்.

சீனியர் நடிகை விசித்ரா உடன் முதல் வாரத்திலேயே சண்டை போட்ட நிலையில், இரண்டாம் வாரத்தில் இயக்குனரும் நடிகருமான பிரதீப் ஆண்டனியுடன் பெரும் பஞ்சாயத்து நிலவி வருகிறது. இந்த சீசனில் சண்டை கோழியாக மாறியுள்ளார் ஜோவிகா என ஏகப்பட்ட மீம்கள் அவரை சுற்றி வலம் வருகின்றன.

Vanitha Vijayakumar shares her Thailand tour photos gets trolled

இளைய மகளுடன் தாய்லாந்த் டூர்: ஜோவிகாவுக்கும் விசித்ராவுக்கும் இடையே நடந்த படிப்பு குறித்து விவாதம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், இந்த வாரம் மரியாதையை தெரியாமல் ஜோவிகா நடந்து வருவதாக பலரும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், வனிதா வீட்டில் இருந்து இன்னொரு பிக் பாஸ் போட்டியாளர் ரெடி ஆகிவிட்டார் என்றும் அடுத்த சீசனில் களம் இறக்க வனிதா ஆயத்தப்படுத்தி வருகிறார் என வனிதா தனது இரண்டாவது மகள் ஜெய்னிதாவுடன் தாய்லாந்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்ட நிலையில், பிக் பாஸ் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

Vanitha Vijayakumar shares her Thailand tour photos gets trolled

மூத்த மகளை பிக் பாஸ் வீட்டுக்குள் சிக்க வைத்து விட்டு இளைய மகளுடன் தாய்லாந்து, பாங்காக் என டூர் அடித்து வரும் வனிதா விஜயகுமார் மகளுடன் மேட்சிங்காக இருக்கும் உடைகளை அணிந்து கொண்டு எடுத்துக் கொண்ட போட்டோக்களை வெளியிட்டுள்ள நிலையில், ஏகப்பட்ட ட்ரோல் கமெண்ட்டுகளும் நீங்க ஜாலியாக டூர் அடிக்கிறீங்க, பாவம் ஜோவிகா உள்ளே சிக்கி சின்னாபின்னமாகி வருகிறார் போன்ற கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X