Jovika: என் மகள் என்னை மாதிரி தான் இருப்பா.. வனிதா விஜயகுமார் ஷேர் பண்ண போஸ்ட்டை பாருங்க!

சென்னை: பிக் பாஸ் வீட்டில் தனது மகள் தனியாக சண்டை போட்டு கெத்து காட்டி வருகிறார் என்றும் விசித்ராவை ஜோவிகா விளாசியது சரி தான் என்கிற டோனில் ஆதரவு தெரிவித்து வரும் வனிதா விஜயகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள லேட்டஸ்ட் போஸ்ட் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது.

18 வயதான ஜோவிகா பிக் பாஸ் தமிழ் சீசன் 7ல் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார். ஆனால், அத்தனை போட்டியாளர்களையும் லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்யும் விதமாக தாறுமாறாக தனது கேமை பிக் பாஸ் வீட்டில் யாருக்காகவும் எதற்காகவும் பயப்படாமல் விளையாடி வருகிறார்.

Vanitha Vijayakumar shares Jovika childhood photos

ஜோவிகாவை எங்கே சீண்டினால் டென்ஷன் ஆவார் என நன்கு தெரிந்து வைத்துக் கொண்டிருந்த விசித்ரா அவரது படிப்பு பற்றியும் அவருக்கு தமிழ் எழுத தெரியாது போன்ற விஷயங்களை டார்கெட் செய்து கேம் ஆட ஜோவிகா பொங்கி எழுந்துவிட்டார்.

கற்றல் வதை கூடாது: கற்றல் விதி இருக்கலாம், கற்றல் வதை இருக்க கூடாது என கமல் பள்ளி மாணவர்களுக்கு புரியும் விதமாக பேசாமல் பவா செல்லதுரைக்கு புரியும் படி பேசி அந்த பஞ்சாயத்தை கையாண்டது சுத்தமாக செட்டாகவில்லை என்று கமல் ரசிகர்களே சோஷியல் மீடியாவில் கழுவி ஊற்றி வருகின்றனர்.

உள்ளே வெளியே: பிக் பாஸ் வீட்டுக்குள் ஜோவிகா ஒரு கேம் ஆடி வரும் நிலையில், பிக் பாஸ் வீட்டுக்கு வெளியே தனது மகளுக்கு ஆதரவு குரல் கொடுப்பது மட்டுமின்றி எப்போ வேண்டுமானால் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று விசித்ராவை ஒரு பொள பொளந்து விடுவேன் என்கிற ரீதியில் அவர் ஒரு கேம் ஆடி வருகிறார்.

குழந்தை ஜோவிகா பிக்ஸ்: அம்மாவை போலவே இருக்கும் மகள்களுக்கு சமர்ப்பணம் என தற்போது தனது மகள் ஜோவிகாவின் குழந்தைப் பருவ புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார் வனிதா விஜயகுமார். பள்ளியில் ஸ்போர்ட்ஸின் போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீட்டில் அட்டகாசம் செய்யும் போட்டோக்கள், இரு குழந்தைகளும் அம்மா வனிதாவுக்கு அன்பு முத்தம் கொடுக்கும் போட்டோக்களையும் ஷேர் செய்துள்ளார்.

செம க்யூட்: ஜோவிகா குழந்தையில் செம க்யூட்டாக இருக்கிறார் என்றும் அவர் போல்டாக தனித்துவமாக பேசி ஏகப்பட்ட ரசிகர்களை ஈர்த்துள்ளார் என்றும் சீக்கிரம் நீங்க பிக் பாஸ் வீட்டுக்குள்ள போங்க வனிதா என்றும் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X