வாவ்.. வாட் எ சர்ப்ரைஸ்.. வனிதா அக்கா, சாண்டி, ஷெரின், ஐஸ்வர்யா என எல்லாருமே மீண்டும் பிக் பாஸில்!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சிக்கு மறுபடியும் வனிதா விஜயகுமார் வந்து ஒரு வாரம் இருக்க வேண்டும் என ரசிகர்கள் ஆசைப்பட்ட நிலையில், மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வனிதா அக்காவின் அசத்தல் என்ட்ரி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் தீபாவளி பண்டிகை களைகட்டி வருகிறது.

ஏகப்பட்ட டாஸ்க்குகளை போட்டியாளர்கள் செய்து வருகின்றனர். வனிதா மட்டுமின்றி, ஏகப்பட்ட முன்னாள் பிக் பாஸ் பிரபலங்களும் கலந்து கொள்ளும் சூப்பரான புரமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

செம ஷார்ப்

செம ஷார்ப்

பிக் பாஸ் எடிட்டர் ஒரு நாள் 3வது புரமோவை போடுகிறார். ஒரு நாள் போடாமல் ஏமாற்றுகிறார் என்கிற புகார்கள் எழுந்த நிலையில், நேற்று போல இன்னைக்கும் ஷார்ப்பா 3வது புரமோ 3 மணிக்கு டான்னு விஜய் டிவி ட்விட்டர் பக்கத்தில் வந்துவிட்டது. கூடவே ஏகப்பட்ட சர்ப்ரைஸ்களை முதல் முறையாக இந்த சீசனில் ரசிகர்கள் கண்டு வியந்தனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வனிதா

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வனிதா

பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளரான வனிதா விஜயகுமார் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதிரடி புரமோ தற்போது வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. கருப்பு சேலையில், டிஜிட்டல் ஸ்க்ரீனில் வனிதா விஜயகுமார் பிக் பாஸ் போட்டியாளர்களை வேற லெவலில் உற்சாகப்படுத்துகிறார்.

மீண்டும் ஷெரின்

மீண்டும் ஷெரின்

வனிதா விஜயகுமார் மட்டும் இல்லைங்க போன சீசன் அதற்கு முந்தைய சீசனில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட ஏகப்பட்ட பிக் பாஸ் பிரபலங்கள், அகம் டிவி வழியே போட்டியாளர்களுடன் பேசி அரட்டை அடிக்கும் அட்டகாசமான நிகழ்ச்சி இன்று இரவு ஒளிபரப்பாக உள்ளது. ஷெரின் சும்மா எப்படி கலக்குறாங்கன்னு பாருங்க!

ரொமான்டிக் பாய் சோம்

ரொமான்டிக் பாய் சோம்

இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வரும் நடிகை ஐஸ்வர்யா தத்தா, சோமசேகர் தான் ரொமான்டிக் பாய் என அவருக்கு தனது ஓட்டுக்களை போட்டு கலாய்க்கும் கலகலப்பான புரமோவை பார்த்த ரசிகர்கள், இன்னைக்கு சிறப்பான சம்பவம் இருக்கு போல என இன்றைய நிகழ்ச்சியை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

செம சர்ப்ரைஸ்

செம சர்ப்ரைஸ்

வனிதா விஜயகுமார், விஜயலக்‌ஷ்மி, ஷெரின், மகத், சாண்டி மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் பிக் பாஸ் டிவி வழியே லைவ் வீடியோவில் கலந்து கொண்டு போட்டியாளர்களுடன் கலந்துரையாடும் தீபாவளி ஸ்பெஷல் நிகழ்ச்சியாக இன்றைய நிகழ்ச்சி இருக்கப் போகிறது என்கிற செம சர்ப்ரைஸை 3வது புரமோ காட்டி உள்ளது.

சாண்டி மாஸ்டர்

சாண்டி மாஸ்டர்

போன சீசனில் காமெடி கிங்காக திகழ்ந்த சாண்டி மாஸ்டர் போல இந்த சீசனில் ரியோ ராஜ் செம ஜாலியாகவும் சில நேரங்களில் டென்ஷனாகவும் விளையாடி வருகிறார். நல்லா விளையாடுங்க என சாண்டி மாஸ்டர் ஸ்க்ரீனில் தோன்றி சொல்வதை கேட்டு சந்தோஷப்பட்ட ரியோ மற்றும் சோம் டேக் இட் என தங்களது ஸ்டைல் ஃபிளையின் கிஸ்ஸை அவருக்கும் கொடுத்தனர்.

லெமன் அண்ட் தி ஸ்பூன்

லெமன் அண்ட் தி ஸ்பூன்

தீபாவளிக்காவது டஃப் ஆன பிசிக்கல் டாஸ்க் இருக்கும் என்று பார்த்தால், எல்.கே.ஜி. குழந்தைகள் விளையாடும் லெமன் அண்ட் தி ஸ்பூன் போல, முட்டை விடுறது, வாயால் ஆப்பிள், தர்பூசணி பழங்களை கவ்வி தின்பது போன்ற டாஸ்க்குகளை கொடுத்து மொக்கை போட்டு வருகின்றனர். இன்றைய நிகழ்ச்சி எப்படி இருக்கப் போகிறது என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X