உலகத்துலயே ரொம்ப இரிடேட்டிங்கான இடம்னா அது பிக் பாஸ் வீடு தான்.. வனித விஜயகுமார் விளாசல்!

சென்னை: பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்ட வனிதா விஜயகுமார் எலிமினேட் ஆன நிலையில், மீண்டும் வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்து கலக்கினார்.

Recommended Video

Bigg Boss வீட்டு கதவை உடைக்க முயற்சித்த Vanitha Vijaykumar | Bigg Boss Ultimate Vanitha Walks Out

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் 24 மணி நேரம் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்ட நிலையில், கடந்த வாரம் சிம்பு ஹோஸ்ட்டாக வருவதற்கு முன்பாகவே வீட்டை விட்டு அடம்பிடித்து வெளியேறினார்.

இந்நிலையில், பிக் பாஸ் வீடு குறித்தும் அந்த நிகழ்ச்சி குறித்தும் ஏகப்பட்ட திடுக்கிடும் விஷயங்களை ட்வீட் செய்துள்ளார் வனிதா விஜயகுமார்.

வெடிக்கும் பஞ்சாயத்து

வெடிக்கும் பஞ்சாயத்து

பிக் பாஸ் வீட்டில் காமக்களியாட்டமே நடப்பதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்கள் ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது. சிம்பு வந்த நேரமாக பார்த்து பிக் பாஸ் வீட்டில் ஏகப்பட்ட பிரச்சனைகள் முளைத்திருக்கிறதே என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய வனிதா விஜயகுமார் அந்த நிகழ்ச்சி குறித்து ஏகப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார்.

இப்போதான் சந்தோஷம்

இப்போதான் சந்தோஷம்

ஒருவழியாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிட்டேன், இப்போதான் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன். ஏகப்பட்ட பிரச்சனைகள் அந்த வீட்டில் இருக்கின்றன. லைவ் என்று சொல்கிறார்கள் ஆனால், நான் பேசிய பல வார்த்தைகளை எடிட் செய்துள்ளனர். இதற்கு ஏன் லைவ் என்று போட வேண்டும் என வரிசையாக ஏகப்பட்ட ட்வீட்களை போட்டு வெளுத்து வாங்கி உள்ளார்.

நைட்மேர்

நைட்மேர்

பிக் பாஸ் வீடு ரொம்பவே இரிடேட்டான இடம் என்று ட்வீட் போட்டிருக்கும் வனிதா விஜயகுமார், அந்த வீட்டில் இருந்து வெளியேறி இத்தனை நாட்கள் ஆன பின்னரும் ஒரே நைட்மேராகவே உள்ளது. இதில், இருந்து எப்பத் தான் சகஜ நிலைக்கு திரும்புவேன் என்றே தெரியவில்லை என வனிதா விஜயகுமார் பிக் பாஸ் வீடு உளவியல் ரீதியாக போட்டியாளர்களுக்கு ஒரு நரகம் போல இருப்பதை சுட்டிக்காட்டியிருக்கிறார்.

நெகட்டிவிட்டி

நெகட்டிவிட்டி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டால் ஏகப்பட்ட மனவேதனைகளை ஒவ்வொரு போட்டியாளர்களும் சந்திக்க வேண்டிய நிலை உருவாகி விடுகிறது என்றும் இதுவரை போட்டியாளர்களாக பங்கு கொண்ட பலரும் இந்த நெகட்டிவிட்டி பிரச்சனையில் சிக்கி தவித்து வருவது அனைவரும் அறிந்த விஷயம் தான் என்றும் இப்போ அனிதாவும் அதே நெகட்டிவிட்டியில் மீண்டும் மாட்டியிருக்கிறார் என்றும் கூறியுள்ளார்.

என்டர்டெயின்மென்ட் நிகழ்ச்சியே அல்ல

என்டர்டெயின்மென்ட் நிகழ்ச்சியே அல்ல

மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சி அதன் என்டர்டெயின்மென்ட் தன்மையையே இழந்து விட்டதாகவும் போட்டியாளர்கள் மென்டல் டார்ச்சர்களை உள்ளே அனுபவிக்கின்றனர் என்றும் வனிதா விஜயகுமார் கூறியுள்ளார். சீக்கிரமே வெளிநாட்டுக்கு சென்று ஓய்வெடுத்து மன நிம்மதியை தேடப் போகிறேன் என்றும் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

கமல் விலக காரணமும் அதுவா

கமல் விலக காரணமும் அதுவா

பிக் பாஸ் அல்டிமேட்டின் தரம் முற்றிலும் குறைந்து விட்டதாலே அதிலிருந்து கமல் வெளியேறினாரா? என்கிற கேள்வியையும் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை வனிதா விஜயகுமார் இதற்கு முன்பு சொல்லாத நிலையில், இப்ப மட்டும் சொல்ல என்ன காரணம் என்றும், மற்ற சீசன்கள் எல்லாம் 24 மணி நேரமும் லைவாக நடக்காதோ? என்கிற சந்தேகங்களும் வனிதா விஜயகுமாரின் இந்த ட்வீட்கள் மூலம் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X