For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  உண்மையான ஹீரோ சொந்த சகோதரியை காயப்படுத்தி ஏமாற்ற மாட்டான்.. அருண்விஜய் மீது பாய்ந்த வனிதா!

  |
  Arun Vijay insults Vanitha Vijaykumar love

  சென்னை: உண்மையான ஹீரோ சொந்த சகோதரியை காயப்படுத்தி ஏமாற்றமாட்டான் என நடிகர் அருண்விஜயை தாக்கி நடிகை வனிதா விஜயகுமார் டிவிட்டியிருக்கிறார்.

  1995ஆம் ஆண்டு வெளியான சந்திர லேகா படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், சக போட்டியாளர்களுடன் சண்டை போட்டதோடு தான் சொல்வதுதான் சரி என்று பேசி வந்தார்.

  மேலும் ஒருவர் சொல்வதை மற்றொருவரிடம் திரித்து கூறி சண்டையை மூட்டிவிட்டார். இதனால் கடுப்பான மக்கள் அவரை கழுவி ஊற்றினர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற வனிதாவை திட்டாத ஆட்களே இல்லை எனும் அளவுக்கு வாங்கிக்கட்டினார்.

  விஜயலட்சுமிக்கு மெகா சர்ப்ரைஸ்.. "கசட தபற" வில் நடிக்க வாய்ப்பு!

  அருண்விஜய் மீது பாய்ச்சல்

  அருண்விஜய் மீது பாய்ச்சல்

  பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகும் டிவிட்டரில் நடிகை கஸ்தூரியுடன் சண்டை போட்டு வந்தார் வனிதா விஜயகுமார். இந்நிலையில் தனது அண்ணனான நடிகர் அருண்விஜயை சாடி டிவிட்டியிருக்கிறார் வனிதா.

  ஏமாற்ற மாட்டான்

  ஏமாற்ற மாட்டான்

  அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் அருண்விஜயின் டிவிட்டர் ஹேன்டிலை குறிப்பிட்டு உண்மையான ஹீரோ, சொந்த தங்கையை காயப்படுத்தவும் மாட்டான், ஏமாற்றவும் மாட்டான் என தெரிவித்துள்ளார். மேலும் உன்னாலும் எனது தங்கைகளாலும் நான் தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளேன்.

  நிறுத்துங்கள்

  இந்த பிரச்சனையை தீர்க்க போதுமான முதிர்ச்சியுள்ளவன் நீ. நானும் சமமாக நடத்தப்பட வேண்டும் அவமதிக்கப்படக்கூடாது. என்னையும் என் குழந்தையையும் காயப்படுத்துவதை நிறுத்துங்கள் என பதிவிட்டுள்ளார்.

  ஏமாற்றப்படுகிறேன்

  மேலும் என் அம்மாவின் சொத்தில் வாழ்கிறேன். நான் மறுக்கப்படுகிறேன், ஏமாற்றப்படுகிறேன், புண் அடைகிறேன். என் குழந்தைகள் என்ன தவறு செய்தார்கள்? இதையெல்லாம் அனுபவிக்க. நான் எல்லாவற்றையும் ஒரே ஆளாக கடந்துவருகிறேன். கடவுள் எப்போதும் என் பக்கத்தில் இருக்கிறார். அவர்கள் அதனை உணருவார்கள் என தெரிவித்துள்ளார்.

  பிரச்சனைகள்

  பிரச்சனைகள்

  மற்றொரு டிவிட்டில் எனது குடும்பத்தினரால் என்னுடைய சொந்த வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளேன். நான் சில பிரச்சனைகளை சந்திக்கிறேன். சினிமாத்துறையை சேர்ந்தவர்களுக்கு எளிதாக வீடு வாடகைக்கு கிடைக்காது.

  சந்தோஷமாக உள்ளனர்

  மூன்று குழந்தைகளுக்கு தாயான எனக்கு அது சங்கடமாகவும் அவமானமாகவும் உள்ளது. இரண்டு மகள்கள் உள்ளனர், என் குடும்பத்தினரால்தான் நான் இந்த பிரச்சனைகளை எதிர்கொள்கிறேன். அருண்விஜயும் என் சகோதரிகளும் சந்தோஷமாக உள்ளனர் என தெரிவித்துள்ளார்.

  வனிதா மீது கோபம்

  வனிதா மீது கோபம்

  ஏற்கனவே வனிதா தனது குடும்பத்தினருடன் பிரச்சனை செய்து காவல்நிலையம் வரை சென்றார். அப்பா அண்ணன்,தங்கைகளின் கணவர் என யாரையும் விடாமல் செய்தியாளர் சந்திப்பிலும் சாடினார். இதனால் வனிதா மீது அவரது குடும்பத்தினர் செம கோபத்தில் உள்ளனர். எந்த நல்லது கெட்டதிலும் அவரை சேர்த்துக்கொள்வதில்லை.

  மகளின் விழா

  மகளின் விழா

  பிக்பாஸ் நிகழ்ச்சி மேடையில் கூட தனது மகன் ஸ்ரீஹரி தன்னிடம் ஒருநாள் வருவான் என்றும் தனது குடும்பத்தினர் மீண்டும் தன்னை சேர்த்துக்கொள்வார்கள் என்று நம்புவதாகவும் உருக்கமாக பேசினார். அவரது மகள் பெரிய பெண்ணான நிகழ்ச்சியில் கூட வனிதாவின் குடும்பத்தினர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  English summary
  Vanitha Vijayakumar slams her brother Actor Arun Vijay. Vanitha says real hero A real hero doesn't hurt and cheat his own sister by mentioning Arun Vijay name in her tweet.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more
  X