இது கோழியா.. இல்லை காக்காவா? KFC சிக்கனை விளாசிய வனிதா விஜயகுமார்.. என்ன ஆச்சு?
சென்னை: பிரபல ஃப்ரைட் சிக்கன் நிறுவனமான KFC சிக்கனை ஆர்டர் செய்த நடிகை வனிதா விஜயகுமார் அதனை போட்டோ எடுத்துப் போட்டு, இது கோழியா இல்லை காக்காவா என விளாசி உள்ளார்.
சினிமா, சின்னத்திரை, யூடியூப் என ரவுண்டு கட்டி அசத்தி வருகிறார் நடிகை வனிதா விஜயகுமார்.
இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட ஃபாலோயர்களை கொண்டுள்ள அவர் திடீரென கேஎஃப்சி சிக்கன் குறித்து போட்டுள்ள பதிவு பலரது கவனத்தை கவர்ந்துள்ளது.

சாப்பிடலாமேன்னு ஆசையா
வித விதமாக வனிதா விஜயகுமாரும் அவரது மகளுமே யூடியூப் சேனலுக்காக சமைத்து வீடியோக்களை போட்டு வருகின்றனர். அவர்கள் வெளியிடும் வீடியோக்களில் உள்ள ஐட்டங்கள் எல்லாமே ரொம்பவே பெரிதாக தெரியும். இந்நிலையில், வீக்கெண்ட் அதுவுமா கேஎஃப்சி சிக்கனை வாங்கி சாப்பிடலாமே என ஆசைப்பட்ட வனிதா விஜயகுமாருக்கு ரொம்பவே அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

எல்லாமே சின்னதா இருக்கு
கேஎஃப்சி சிக்கனை ஆர்டர் செய்த வனிதா விஜயகுமார் ஆசை ஆசையாக டப்பாவை திறந்து பார்த்தால் என்னடா இது கோழியை வெட்டி பொறித்தார்களா? இல்லை கோழிக் குஞ்சாக இருக்கும் போதே பொறித்து விட்டார்களா என்கிற டவுட்டு எழுந்துள்ளது. உடனடியாக அந்த ஃபிரைட் சிக்கன்களை வரிசையாக எடுத்து போட்டோ எடுத்து அப்படியே தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு அதிரடியான போஸ்ட் ஒன்றையும் பதிவிட்டு பரபரப்பை கிளப்பி உள்ளார் வனிதா விஜயகுமார்.

கோழியா காக்காவா
காக்கா பிரியாணி தின்னா காக்கா குரல் வராம உன்னி கிருஷ்ணன் குரலா வரும் என்கிற விவேக் காமெடி தான் நினைவுக்கு வருகிறது. அந்த அளவுக்கு இவ்வளவு சின்னதா உலகத்துல எங்கேயும் சிக்கன் இருக்காது என்றும் இது என்ன கோழியா அல்லது காக்காவா என கேட்டு கேஎஃப்சி நிறுவனத்தை வச்சு விளாசி உள்ளார் வனிதா விஜயகுமார்.

அப்படித்தான் ஏமாத்துறாங்க
வனிதா விஜயகுமார் போட்ட பதிவை பார்த்ததும் அவரது ரசிகர்கள் ஆமா அக்கா அப்படித்தான் ஏமாத்துறாங்க, நானும் இதை ரொம்ப வருஷமா ஃபீல் பண்ணியிருக்கேன். ஆனால், நீங்க தான் போல்டா சொல்லியிருக்கீங்க என வனிதா விஜயகுமாருக்கு ஆதரவு தெரிவித்து கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

சிக்கன் சமைக்கும் மகள்
யூடியூபில் வித விதமான வெஜ் அண்ட் நான் வெஜ் ஐட்டங்களை சமைத்து அசத்தி வருகிறார் வனிதா விஜயகுமாரின் மகள். சமீபத்தில் சிக்கன் லெட்யூஸ் எனும் டிஷ் உடன் அவர் வெளியிட்ட யூடியூப் வீடியோவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நானெல்லாம் கறி கடையில வாங்கும் போது சிக்கன் லெக் பீஸ் பெருசா இருக்கே, கேஎஃப்சி சிக்கன் மட்டும் ஏன் இப்படி சின்னதா தரமற்று இருக்கு என கேட்டுள்ளார் வனிதா விஜயகுமார்.

பவர்ஸ்டார் உடன் செல்ஃபி
சமீபத்தில் நடிகை வனிதா விஜயகுமார் பவர் ஸ்டார் உடன் எடுத்த செல்ஃபி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட நிலையில், வேற லெவலில் இணையத்தில் அந்த புகைப்படங்கள் டிரெண்டாகின. மேலும், அதில், பவர் ஸ்டாருக்கு உம்மா கொடுப்பது போல போஸ் கொடுத்திருந்தார் வனிதா விஜயகுமார்.


Click it and Unblock the Notifications











