Vanitha Vijayakumar: என் பொண்ண பார்த்து எப்படி அந்த வார்த்தை கேட்கலாம்.. பிரதீப்பை கிழித்த வனிதா!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 டல் அடித்து வரும் நிலையில், மீண்டும் வனிதா விஜயகுமார் மகள் ஜோவிகாவுக்கும் பிரதீப் ஆண்டனிக்கும் சண்டை மூட்டி விட்டு சோஷியல் மீடியாவில் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்து வருகிறது.

பிக் பாஸ் வீட்டில் முதல் இடத்துக்கு ஆசைப்பட்டு நிற்கும் பிரதீப் ஆண்டனி தான் ஏழ்மையானவன் என்றும் ஜோவிகா பயன்படுத்தும் செருப்பு முதல் மேக்கப் வரை அனைத்துமே காஸ்ட்லி என்றும் அதற்கு எதுக்கு முதல் இடம் என சண்டை போட்ட ப்ரோமோ வெளியான நிலையில், நடிகை வனிதா விஜயகுமார் தனது மகளுக்கு எதிராக பேசிய பிரதீப் ஆண்டனியை சோஷியல் மீடியாவில் கிழித்து தொங்க விட்டுள்ளார்.
பிரதீப் ஆண்டனி தான் ஒரு பிச்சைக்காரன் ரேஞ்சுக்கு புலம்பி பிக் பாஸ் டைட்டிலை வெல்ல ஃபிராடுத்தனம் செய்து வருவதாகவும் நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

ஜோவிகா - பிரதீப் ஆண்டனி சண்டை: ஏற்கனவே பிரதீப் ஆண்டனியை தனது வீட்டு வேலைக்காரன் போல நினைத்து அதிகாரம் பண்ண ஜோவிகாவுக்கு எதிராக பலரும் கமெண்ட் போட்ட நிலையில், தற்போது ஜோவிகா பணக்காரி என்றும் தான் ஏழை என்றும் பிக் பாஸ் வீட்டில் கிடைக்கும் பணம் தனக்கு ரொம்ப முக்கியம் என்பதால் முதலிடத்தில் நிற்கிறேன் என பிரதீப் ஆண்டனி சண்டை போட்டுள்ளார்.
வனிதா விளாசல்: நடிகை வனிதா மட்டும் இப்போதைக்கு பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றால் நடப்பதே வேற என ரசிகர்கள் அந்த ப்ரோமோவை பார்த்து பொங்கிய நிலையில், வனிதா விஜயகுமார் கஷ்டப்பட்டு உழைக்கும் ஒரு அம்மாவின் மகள் தான் ஜோவிகா என்றும் உன்னிடம் காசு இல்லைன்னு புலம்புவதற்காக ஏன் பிக் பாஸ் வீட்டுக்கு வந்த என கேள்வி எழுப்பி விளாசி உள்ளார்.

மேலும், இது சீப்பான கேம் என்றும் பிக் பாஸ் வீட்டில் வரும் பணத்தை வைத்து இவர் படம் தயாரித்து நடிப்பார் என்பதெல்லாம் சுத்த உருட்டு எனக் கூறிய வனிதா விஜயகுமார் திறமை இருந்தால் நல்லா நடிச்சா மத்தவங்கள் பணம் போட்டு உன் படத்தை தயாரிக்கப் போறாங்க என மரண கலாய் கலாய்த்துள்ளார்.

ரொம்ப போர்: இதுவரை இல்லாத அளவுக்கு பிக் பாஸ் சீசன் 7 ரொம்பவே போர் அடித்து வருவதாகவும் ஒரே டிராமாவாகவே ஷோ விஜய் டிவியின் இன்னொரு சீரியல் போல செல்வதால் ரசிகர்கள் யாருமே அதை கண்டுக்கவே இல்லை என ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











