நான் ஆகாஷ் மகன்.. வனிதா அப்படி கொஞ்சிய நிலையில்.. இப்படியொரு இடியைத் தூக்கிப் போட்டுட்டாரே!

சென்னை: தனது மகன் ஸ்ரீஹரியின் பிறந்தநாளை முன்னிட்டு சமூக வலைதள பக்கத்தில் அவரது புகைப்படத்தை ஷேர் செய்து வாழ்த்து கூறியிருந்தார் நடிகை வனிதா விஜயகுமார்.

இந்நிலையில், நெட்டிசன் ஒருவர் ஸ்ரீஹரியிடம் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் வனிதா விஜயகுமார் மனதை ரொம்பவே அப்செட் ஆக்கும் வகையில் இருப்பதை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.

நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா இதுவரை 3 திருமணங்கள் செய்து கொண்டு மூன்று கணவர்களையும் பிரிந்து தன்னுடைய இரு மகள்களுடன் வாழ்ந்து வருகிறார்.

முதல் கணவர்

முதல் கணவர்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த வனிதா விஜயகுமார், விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா படத்தில் அறிமுகமானார். 1995ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமான வனிதா, 2000ம் ஆண்டு ஆகாஷ் என்பவருடன் திருமணம் செய்து கொண்டார். ஆனால், 2007ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்து விட்டு ஆனந்த் ஜெயராமன் என்பவரை அதே ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

மகனை மீட்க வழக்கு

மகனை மீட்க வழக்கு

விவாகரத்துக்கு பிறகு தன்னுடைய மகன் தன்னிடம் தான் இருக்க வேண்டும் என ஆகாஷ் தொடுத்த வழக்கில் அவர் வெற்றிப் பெற்ற நிலையில், ஸ்ரீஹரி ஆகாஷ் உடனே வளர்ந்து வருகிறார். ஆனந்த் ஜெயராமனை திருமணம் செய்து கொண்ட வனிதா விஜயகுமார் கடந்த 2012 மன வருத்தம் காரணமாக அவரையும் பிரிந்தார். சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை 3வதாக திருமணம் செய்து கொண்ட வனிதா பின்னர் ஏற்பட்ட ஏகப்பட்ட பிரச்சனைகள் காரணமாக அவரையும் பிரிந்து தனது மகள்களுடன் வாழ்ந்து வருகிறார்.

மகனை வாழ்த்திய வனிதா

மகனை வாழ்த்திய வனிதா

இந்நிலையில், வனிதா விஜயகுமார் நேற்று தனது மகன் ஸ்ரீஹரியின் பிறந்தநாளை முன்னிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் என் லட்டு பிறந்து 21 ஆண்டுகள் ஆகிறது. நான் அம்மாவாகி 21 வருஷம் ஆகுது, என் திறமையான மகன் எப்போதுமே எல்லாவற்றிலும் சாதிக்க வேண்டும் என பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியிருந்தார்.

நான் ஆகாஷ் மகன்

நான் ஆகாஷ் மகன்

வனிதாவின் போஸ்ட்டுக்கு கீழ் ஏகப்பட்ட ரசிகர்கள் அவரது மகன் ஸ்ரீஹரியை வாழ்த்தி வந்தனர். இந்நிலையில், ஸ்ரீஹரியின் சமூக வலைதள பக்கத்தில் ஒரு நெட்டிசன், நீங்க வனிதா மகனா? என கேள்வி எழுப்ப.. அதற்கு நான் ஆகாஷ் மகன் என ஸ்ரீஹரி பதில் அளித்திருப்பது வனிதா விஜயகுமாருக்கு அவர் கொடுத்துள்ள நெத்தியடி பதில் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

ரசிகர்கள் அட்வைஸ்

ரசிகர்கள் அட்வைஸ்

மனஸ்தாபம் காரணமாக அப்பாவும் அம்மாவும் பிரிந்து இருந்தாலும், என்றைக்குமே நீங்க ஆகாஷ் - வனிதா விஜயகுமார் மகன் தான் என கமெண்ட் போட்டு வனிதாவுக்கு ஆதரவாக ஸ்ரீஹரிக்கு அட்வைஸ் செய்து வருகின்றனர். சின்னத்திரை மற்றும் சினிமா என கடுமையாக உழைத்து நடிகை வனிதா விஜயகுமார் தனது மகள்களை வளர்த்து வரும் நிலையில், மகன் மீது கொண்ட பாசம் காரணமாகத்தான் வாழ்த்து தெரிவித்துள்ளார் என்றும் வனிதாவின் ரசிகர்கள் ட்வீட் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X