கிலுகிலுப்பு இல்லாத புருஷன் பொண்டாட்டி கதையா? அது இல்லாம மிஸ்டர் & மிசஸ் இல்லை - வனிதா விஜயகுமார்
சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் இயக்குநராக அறிமுகமாகியுள்ள படம் மிஸ்டர் & மிசஸ். இந்த படத்தை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா தயாரித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, அங்கு அவர் வாங்கிய சம்பளத்தை வைத்து இந்த படத்தை தயாரித்துள்ளதாக ஏற்கனவே அவர் தெரித்திவிந்தார். நாளை அதாவது ஜூலை 11ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள இந்த படத்தின் சிறப்புக் காட்சி இன்று திரையிடப்பட்டது. அதன் பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய வனிதா விஜயகுமார் பல சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.
அவர் பேசுகையில், " எனக்கு அழுகையும் வருகிறது, அழக்கூடாது என்ற எண்ணமும் உள்ளது. இந்த படம் நாளை வெளியாகி மக்கள் அதற்கு என்ன மாதிரியான வரவேற்பு கொடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் மன நிலையில் தான் நான் இப்போது உள்ளேன். அப்படி இருக்கும்போது, கேப்டன் ஆஃப் த ஷிப்பாக நான் உறுதியாக இருக்க வேண்டும் என்பதால் நான் மிகவும் உறுதியாக இருந்து வருகிறேன்.

இந்த படத்தை நாங்கள் விளையாட்டாகத்தான் தொடங்கினோம். அதன் பின்னர் ஒவ்வொருவராக இந்த படத்திற்குள் வந்தார்கள். எல்லா இயக்குநர்களும் சந்திக்கும் நெருக்கடியை நானும் சந்தித்தேன். எனக்கு ஒரு விஷயம் சரியாக இல்லை என்றால் கோபம் வரும் உடனே அதற்கு ரியாக்ட் செய்துவிடுவேன். ஆனால் இந்த படம் தொடங்கியதில் இருந்து இப்போதுவரையிலும் நான் மிகவும் பொறுமையாக உள்ளேன். ஜோவிகா இந்த படத்திற்காக கடன் வாங்கும்போது கூட எனது படம் சம்பாதித்து விடும். அதை வைத்து நான் இந்த கடனைக் கட்டி விடுகிறேன் என்று கூறவில்லை. நான் படங்களில் நடிப்பேன். அதை வைத்து இந்தக் கடனை கட்டுகிறேன் என்று கூறி கடன் வாங்கினார்.
பெண்களும் அடல்ட்ஸ் தானே: நாங்கள் சின்ன பட்ஜெட்டில் தான் படம் எடுத்துள்ளோம். நீங்கள் ஒரு முறை தியேட்டருக்கு வந்தாலே நாங்கள் பிழைத்துக் கொள்வோம். ராபர்ட் இந்த படத்திற்காக அவரால் முடிந்த அளவுக்கு உறுதுணையாக இருந்துள்ளார். பெண்களும் அடல்ட்ஸ் தானே? அதென்ன ஒரு பெண் இயக்குநர் என்றால், இந்திரா காந்தி மாதிரி ஒரு படம் எடுக்க வேண்டும், உத்வேகம் கொடுக்கும் படங்கள் எடுக்க வேண்டும் என்பது சரியில்லை.

கிலுகிலுப்பு இல்லாத புருஷன் பொண்டாட்டியா: நான் கமர்ஷியல் படம்தான் எடுத்துள்ளேன்.நான் எடுத்த கதையில் 40 வயதில் கணவன் மனைவி. புருஷன் பொண்டாட்டி கதையில் கிலுகிலுப்பு இல்லை என்றால் அவ்வளவுதான். நான் எல்லாம் பாக்யராஜ் சாரின் பல படங்களைப் பார்த்துள்ளேன். முந்தானை முடிச்சு, தாவணிக் கனவுகள் என பல படங்களில் பல காட்சிகள் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். அதை ரிப்பீட் செய்தால் போதுமானதாக இருக்காது. இன்று உள்ள தலைமுறை வேற லெவலில் இருக்கிறார்கள். அவர்களுக்கும் இந்த படம் பிடிக்கும் வகையில் உருவாக்க முயற்சி எடுத்துள்ளோம். அதற்கு வரவேற்பு இருக்கும் என நம்புகிறேன்" என்று பேசியுள்ளார். இவரது இந்த பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











