தம்பி.. ரோஸ் மில்க் சாப்பிடலாமா? சங்கர் கணேஷை அலறவிட்ட வனிதா விஜயகுமார்!

சென்னை: நடிகை வனிதா விஜயகுமார், படங்கள், சீரியல்கள் என எதையும் விட்டு வைக்காமல் ஏதாவது ஒன்றில் நடித்துக்கொண்டே இருக்கிறார்.அந்த வகையில் நடிகை வனிதா, முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் 'வைஜெயந்தி ஐ.பி.எஸ்’. இந்த படத்தில், மாபெரும் ஜாம்பவான் சங்கர் கணேஷ் அவர்களும் நடித்துள்ளார். அவர் நடித்துள்ள காட்சி குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வனிதா, அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். புதுமுக இயக்குனர் மனோஜ் கார்த்திக் காமராஜு இயக்கி வரும் இப்படத்தை 2எஸ் என்டேர்டைன்மெண்ட், திரு எஸ் வினோத் குமார் அவர்கள் வெளியிடவுள்ளார். ஜென் சினிமாஸ், திரு கே பி தினகரன் அவர்கள் தயாரிப்பில் இப்படம் உருவாகி வருகிறது. இந்த தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே பவர் ஸ்டார் மற்றும் வனிதா நடித்து வரும் பிக்கப் படத்தின் தயாரிப்பாளர் ஆவர்.

Vanitha vijayakumar vyjayanthi ips Shankar ganesh

வனிதா விஜயகுமார்: 'வைஜெயந்தி ஐ.பி.எஸ்’ திரைப்படத்தின் இசைவெளியீட்டு வெளியீட்டு விழாவில் அண்மையில் நடைபெற்றது. இதில் பேசிய பவர், என் தோழி வனிதா விஜயகுமாரை சந்தித்து நீண்ட நாட்களாகிவிட்டது என்று சொன்னார். உடனே அங்கிருந்த பத்திரிக்கையாளர்கள், வனிதா, தோழியா? உங்களுக்கும், கல்யாணமே பண்ணி வச்சுட்டாங்க என்றனர். இதையடுத்துபேசிய வனிதா, ஆந்திராவுக்கு போனா, நீங்க பவர் ஸ்டார் பவன் கல்யாண் திருமணம் செய்து விட்டீர்களா என கேட்கிறார்கள். அதற்கு நான், நான் தமிழ்நாட்டு பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனை தான் திருமணம் செய்து இருக்கேன் என்று கூறி வருகிறேன் என்று நகைச்சுவையாக பேசி இருந்தார்.

சங்கர் கணேஷ்: இத்திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், படக்குழு ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளது. அதில், வனிதா சங்கர் கணேஷ் அவர்களை விசாரணை செய்யும் காட்சியில் ரோஸ் மில்க் சாப்பிடலாமா?.. என்று கேட்கும் வண்ணம் காட்சியை அமைத்திருக்கிறார்கள் இந்த பட குழுவினர். இந்த படத்தில் மேலும் இமான் அண்ணாச்சி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X