Vanitha Vijayakumar: சட்டையில் சொருகிய சன் கிளாஸ்.. லுங்கியில் மேடையை தெறிக்க விட்ட வனிதா!

சென்னை: மீண்டும் விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு கலக்கியிருக்கிறார் வனிதா விஜயகுமார். அதன் அட்டகாசமான புகைப்படங்கள் வெளியாகி டிரெண்டாகி வருகின்றன.

வனிதா விஜயகுமாரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் வந்தாலே சோஷியல் மீடியாவில் தீயாக பரவி விடும். அதிலும், இப்படி லுங்கியை தூக்கிக் கட்டிக் கொண்டு தர லோக்கலாக போஸ் கொடுத்ததால் வேற லெவலில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

தொகுப்பாளினி பிரியங்கா, நடிகை ஐஸ்வர்யா, வனிதா விஜயகுமார் என ஸ்டார்ட் மியூசிக் அரங்கே அதிரும் அளவுக்கு செம பர்ஃபர்மான்ஸ் ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.

மீண்டும் விஜய் டிவியில்: நடிகை வனிதா விஜயகுமார் பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக பங்கேற்று பின்னர் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். ஆனால், திடீரென அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சீரியல்களில் நடித்து வந்த வனிதா விஜயகுமார் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் வனிதா விஜயகுமார். தற்போது மீண்டும் விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோவான ஸ்டார்ட் மியூசிக்கில் கலந்து கொண்டு கலக்கி உள்ளார்.

லுங்கியில் வனிதா விஜயகுமார்: விஜய் டிவியின் பாப்புலரான தொகுப்பாளினி பிரியங்கா, கேபிஒய் சரத், நடிகை ஐஸ்வர்யா உடன் இணைந்து கொண்டு வனிதா விஜயகுமாரும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படங்களை தற்போது கேபிஒய் சரத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

நடிகை வனிதா விஜயகுமார் தர லோக்கலாக லுங்கியை தூக்கிக் கட்டிக் கொண்டு செம மாஸாக போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு கவர்ச்சித் தீனிக் கொடுத்துள்ளார்.

Vanitha Vijayakumar stunning in lungi at Vijay tvs Start Music

சட்டையில் சன் கிளாஸ்: மேலும், தனது சன் கிளாஸை சட்டையில் சொருகிய படி வனிதா விஜயகுமார் கொடுத்த போஸை பார்த்த ரசிகர்கள் வேறலெவல் வெறித்தனம் என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

நடிகை ஐஸ்வர்யா சமீப காலமாக சினிமா மற்றும் சீரியல் வாய்ப்பில்லாமல் கஷ்டப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், விஜய் டிவி தொடர்ந்து அவருக்கான வாய்ப்புகளை வழங்கி வருவதையும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Vanitha Vijayakumar stunning in lungi at Vijay tvs Start Music

எழுத்தாளரான மகள்: நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜெனிதா ராஜன் சமீபத்தில் Day and Night எனும் புத்தகத்தை எழுதி எழுத்தாளராக மாறியிருந்தார். அந்த போட்டோக்களை ஷேர் செய்து, பெருமைக்குரிய தாயானேன் என குறிப்பிட்டு இருந்தார் வனிதா விஜயகுமார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X