சில்வர் கோட் மாட்டிக் கொண்டு.. பிக் பாஸ் அல்டிமேட் மேடையை அதிர விட தயாரான வனிதா விஜயகுமார்!
சென்னை: பிக் பாஸ் அல்டிமேட் பிரம்மாண்ட துவக்க விழா நிகழ்ச்சியின் ஷூட்டிங் சனிக்கிழமையான இன்று நடைபெறுகிறது.
அதைமுன்னிட்டு நடன நிகழ்ச்சிகள் எல்லாம் நேற்றே அரங்கேறி உள்ளன. கமல்ஹாசன் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி தான் இன்று நடைபெற போகிறது.
இந்நிலையில், நடன நிகழ்ச்சிக்காக வனிதா விஜயகுமார் சில்வர் கோட் அணிந்தபடி போஸ் கொடுத்த புகைப்படம் டிரெண்டாகி வருகிறது.

நாளை முதல்
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நாளை முதல் ஒளிபரப்பாக போகிறது. பிக் பாஸ் தமிழ் சீசன் 5 முடிந்த நிலையில், மீண்டும் புரமோ வரலையே என ரசிகர்கள் காலை 9 மணிக்கு ட்விட்டர் மற்றும் சமூக வலைதளங்களை அலசி ஆராய்ந்த நிலையில், அப்படியெல்லாம் ஏன் கவலைப் படுறீங்க.. ஆளவிடுங்கடா சாமி என நீங்க சொல்ற அளவுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை 24 மணி நேரமும் போடப் போகிறோம் என பிக் பாஸ் அல்டிமேட்டை ஆரம்பித்துள்ளனர்.

14 போட்டியாளர்கள்
சினேகன், ஜூலி, வனிதா விஜயகுமார், அபிராமி, தாடி பாலாஜி, சுரேஷ் சக்கரவர்த்தி, அனிதா சம்பத், ஓவியா, பாலாஜி முருகதாஸ், நிரூப், தாமரை செல்வி, சுஜா வருணி, பரணி, சுருதி உள்ளிட்ட போட்டியாளர்கள் இந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஓவியா கன்ஃபார்மா
இதுவரை நடிகை ஓவியாவின் புரமோவை பிக் பாஸ் அல்டிமேட் டீம் வெளியிடாமல் தாமதப்படுத்தி வருவது ரசிகர்களுக்கு கடைசி வரை ஓவியா நிகழ்ச்சியில் பங்கேற்பாரா? மாட்டாரா? என்கிற கேள்வியை எழுப்பி வருகிறது. நடிகை ஓவியாவுக்கு உடல் நிலை சரியில்லை என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கும் நிலையில், அவர் வருவாரா? இல்லையா? என்பது இதுவரை உறுதியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சில்வர் கோட்டில் வனிதா
சில்வர் நிற கோட் அணிந்துக் கொண்டு வனிதா விஜயகுமார் செம டான்ஸ் போட காத்திருக்கிறார் பிக் பாஸ் அல்டிமேட் மேடையில், மேலும், ஒரு சூப்பரான ஸ்கிட்டையும் அவர் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த உடையுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபியை வனிதா விஜயகுமார் ஷேர் செய்துள்ளார்.
Recommended Video

ஓவியா வரலைன்னா
ஓவியா பிக் பாஸ் அல்டிமேட்டில் பங்கேற்கவில்லை என்றால் ஒட்டுமொத்த ரசிகர்களும் வனிதா விஜயகுமாரின் ஆர்மியாக மாறி அவருக்கே டைட்டிலை தூக்கிக் கொடுக்கும் அளவுக்கு ஓட்டுக்களை குவிக்கப் போகிறோம் எனக் கூறி வருகின்றனர். ஷோ ஆரம்பிக்கும் முன்பாகவே டைட்டில் வின்னரை இப்படி ரசிகர்கள் முடிவு செய்கிறார்களே என மற்ற போட்டியாளர்களின் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











