நான் கூட பப்லு மாதிரி பண்ணலாம்.. அது அவரோட பர்சனல்.. ஆதரவாக நின்ற வனிதா!

சென்னை: நடிகர் பப்லு பிரித்திவிராஜ் ஷீத்தல் விவகாரம் இணையத்தில் புயலை கிளப்பி வரும் நிலையில் வனிதா அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.

நடிகர் பிரித்திவிராஜ், மலேசியாவை சேர்ந்த 24 வயதான ஷீத்தல் என்ற பெண்ணுடன் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்தார்.

இவர்கள் இருவரும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டதாகவும் செய்திகள் வெளியாகின.

Vanitha Vijayakumar Supported Babloo Prithviraj And Sheetal breakup

பப்லு பிரித்திவிராஜ்-ஷீத்தல்: 57 வயதான நடிகர் பிரித்திவிராஜ் 24 வயது பெண்ணை காதலிப்பதா என பெரும் சர்ச்சை கிளம்பியது. ஆனால், அனைத்து சர்ச்சைக்கும் பப்லு சரியான பதிலடி கொடுத்திருந்தார். இதையடுத்து, பிரித்திவிராஜின் பிறந்த நாள் அண்மையில் கொண்டாடப்பட்ட நிலையில், அதில் ஷீத்தல் இல்லாதது இருவரும் பிரிந்துவிட்டார்களா? என்ற கேள்வியை எழுப்பியது.

என் தனிப்பட்ட வாழ்க்கை: அது உண்மை என்பது போல, இன்ஸ்டாகிராமில் இருவரும் ஒன்றாக போட்ட அனைத்து இன்ஸ்டாகிராம் பதிவையும் டெலீட் செய்துவிட்டனர். இதனால் நெட்டிசன்கள் இருவரும் பிரிந்துவிட்டனர் என்பதை உறுதி செய்தனர். இதையடுத்து, யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த பப்லு, என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இனி வெளியில் பேசமாட்டேன் என்று விரக்தியாக பேசி இருந்தார்.

நடிகை வனிதா: இப்படி இந்த விவகாரம் பூதாகரமாகி வரும் நிலையில், நடிகை வனிதா பேசிய பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், பப்லு, சிறுவயதில் இருந்தே சில பிரச்னைகளை பார்த்து இருக்கிறார். தனது மகனுக்காக நிறைய தியாகம் செய்திருக்கிறார். அது எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும். கணவனும், மனைவியும் பிரிய என்ன காரணம் என்பது அவர்களுக்கு மட்டும் தான் தெரியும். அவர்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை.

தனிப்பட்ட வாழ்க்கை இருக்கு: 27 வயது மகன் இருக்கும் போது 23 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டாரா என்ற கேள்வி தேவையற்றது. அவர் தனது மகனை ரோட்ல விட்டுவிடவில்லை. இப்படி ஒரு மகன் இருக்கிறான் என்று நினைத்து தன் சொந்த வாழ்க்கையை வாழக்கூடாது என்று சொல்வது முட்டாள்தனம். எனக்கு ஜெயா, ஜோவிகா என்ற குழந்தைகள் இருக்காங்க, அவர்களுக்கு நான் பொறுப்பு. ஆனால் அவர்களுக்காக தூங்காமல் சிரிக்காமல் இருக்க முடியாது.

நான் கூட பப்லு மாதிரி பண்ணலாம்: பிரித்திராஜ் ஒரு தந்தையாக தனது கடமையை செய்தார். அவர் இப்போது சோர்வாக இருந்தார். வயது வித்தியாசத்தை தாண்டி ஒரு ஈர்ப்பு இருந்தது. வாழ்க்கையில் நாளை என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. நான் கூட நாளைக்கு பப்லு மாதிரி பண்ணலாம் அது அவங்களோடு பர்சனல் என்று வனிதா பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X