எல்லாருமே தப்பு பண்றவங்க தான்.. மன்னிப்பெல்லாம் கேட்காத ஐஷு.. வனிதா விஜயகுமார் ஆதரவு!
சென்னை: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் நிக்சன் உடன் ஐஷு நெருங்கி பழகிய நிலையில், சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து குறைவான ஓட்டுகள் உடன் வெளியேறிய ஐஷு அந்த ஷோவில் தனது போர்ஷன்கள் மற்றும் அதற்கு எதிராக குவிந்த நெகட்டிவ் ட்ரோல்களை பார்த்த ஐஷு தற்போது பதிவிட்டுள்ள மிகப்பெரிய மன்னிப்பு கடிதம் அனைவரையும் உலுக்கியுள்ளது.
உயிரை விடவே தான் எண்ணியதாகவும் அந்த அளவுக்கு மோசமாக தனது ஆட்டம் பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்ததாகவும், கெட்ட வார்த்தை பேசியதற்காகவும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஆனால், என்னை பலரும் அதே கெட்ட வார்த்தையை சொல்லி ஏன் திட்டுகின்றனர். அப்போ நான் எங்கிருந்து கற்றுத் தெளிவேன் என்கிற கேள்வியை முன் வைத்திருந்தார்.

வனிதாவிடம் மன்னிப்பு: மேலும், வனிதா விஜயகுமார் விமர்சித்ததை பார்த்தும் மனமுடைந்து நானும் உங்கள் மகள் போல தானே ஜோவிகாவை விட ஒரு வயது தான் அதிகம் என்னை மன்னித்து விடுங்கள் மேடம் என பதிவிட்டு இருந்தார். பிரதீப் ஆண்டனியிடமும் மன்னிப்புக் கோரியிருந்தார்.
ஐஷுவுக்கு ஆறுதல்: இந்நிலையில் அதை பார்த்த நடிகை வனிதா விஜயகுமார், ஐஷு உனக்காக மீண்டும் எக்ஸ் தளத்தில் இந்தப் பதிவை போடுகிறேன், நீ சிறப்பாகவே விளையாடினாய். யாருக்காகவும் உன்னை மாற்றிக் கொள்ளாதே.. எல்லோரும் இங்கே தவறுகள் செய்யத்தான் செய்கிறோம். அது பெரிய தவறு அல்ல.. இதற்காக நீ இப்படி எல்லாம் மனமுடைந்து மன்னிப்பு கேட்க தேவையில்லை. உன் வாழ்க்கையில் இதைவிட பெரிய உயரங்களை தொடுவாய் என ஆறுதல் கூறியுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒரு கேம் ஷோவாக மட்டுமே பார்க்க வேண்டுமே தவிர அதை வைத்து போட்டியாளர்களை தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசி அவர்களை காயப்படுத்தக் கூடாது என பலரும் தற்போது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஆனால், அந்த ஷோவே வன்ம குடோனாக இருக்கிறதே என்ன செய்ய என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருவதும் குறிப்பிடத்தக்கது.
யாருக்காவது ஏதாவது நேர்ந்து விட்டால் நிகழ்ச்சியின் நிர்வாகம் என்ன பதில் அளிக்கும் என்றும் தொகுப்பாளர் கமல் எப்படி இந்த பிரச்சனையை சரி செய்யப் போகிறார் என்கிற கேள்விகளும் எழுகின்றன.


Click it and Unblock the Notifications











