Bigg Boss7: விசித்ரா என்ன வார்டனா.. என்ன நான்சென்ஸ் இது.. விளாசிய வனிதா!

சென்னை: விசித்ரா என்ன நான்சென்ஸ் மாதிரி பேசுறாங்க என்று நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் கடந்த வாரம் தொடங்கியது.

நிகழ்ச்சி ஆரம்பித்த சில நாட்களுக்குள்ளாகவே போட்டியாளர்கள் சண்டை போட ஆரம்பித்து விட்டனர்.

விசித்ரா, ஜோவிகா சண்டை: பிக்பாஸின் இந்த சீசனில் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல போட்டியாளர்கள் உள்ளனர். இதன் முதல் எபிசோடில் அனைத்து போட்டியாளர்களும் அவரவர் வாழ்க்கை குறித்தும் அவர்களின் தொழில் குறித்தும் பேசினார்கள். அப்போது,வனிதாவின் மகன் ஜோவிகா, தான் பள்ளிப்படிப்பை 9ஆம் வகுப்போடு நிறுத்திக் கொண்டதாகவும் அதற்கு மேல் தனக்கு படிப்பு வராததால் நடிப்பில் டிப்ளமோ படித்ததாகவும் கூறினார்.

Vanitha Vijayakumar talked about Vichitra Jovika fight in Bigg Boss house

கடுப்பான ஜோவிகா: ஜோவிகா தான் பள்ளிப்படிப்பை தொடரவில்லை என்று கூறியதையடுத்து விசித்ரா மற்றும் யுகேந்திரன் ஆகியோர் நடிப்பில் டிப்ளமோவைவிட ஒரு டிகிரி அவசியம் என்று அறிவுரை கூறினார்கள். ஜோவிகா அதற்கு தான் சமயல் கலையை படிக்க உள்ளதாக கூறினார். இதனால், டென்ஷனான ஜோவிகா இனி இதுகுறித்து பேசாதே என்றார்.

முற்றிய சண்டை: இதையடுத்து, விசித்ரா மீண்டும் ஜோவிகாவின் படிப்பு குறித்து பேசினார். உடனே, ஜோவிகா, அனைவரும் படிச்சுதான் பெரிய ஆள் ஆக வேண்டும் என்ற அவசியம் இல்லை, படிப்பினால் பலர் பாதிக்கப்படுகிறார்கள், பலர் தவறான முடிவினையும் எடுக்கிறார்கள் என்று கூறினார். இதற்கு பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் விசிலடித்ததால் டென்ஷனான விசித்ரா, உன் அம்மா சொல்ல மாட்டாங்களா இதெல்லாம் என்று கேட்க, என் அம்மா சொன்னா நான் கேட்டுக்கிறேன். விசித்ராவை வா போ என்று ஒருமையிலும் பேசினார். இது இணையத்தில் மிகப்பெரிய விவாதமாக மாறியது.

Vanitha Vijayakumar talked about Vichitra Jovika fight in Bigg Boss house

திடீரென டாக்டரேட்: இந்நிலையில், இதுகுறித்து விளக்கம் கொடுத்துள்ள வனிதா, அதில், விசித்ரா இத்தனை ஆண்டுகள் சினிமாவில் இருந்தாலும், அவங்களை எனக்கு நான்கு ஆண்டுகளாக தெரியும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாமா... வேண்டாமா என்று கேட்டார்கள். அதே போல பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்தும், சம்பளம் குறித்தும் பல விஷயத்தை பேசினார்கள். இவ்வளவு தூரம் என்னிடம் பழகிய அவர்கள் சைக்காலஜியில் டாக்டரேட் வாங்கியதை என்னிடம் சொல்லவில்லை.

நான்சென்ஸ்: அதே போல, வீட்டில் இருக்கும் பெண்களின் உடை, டாட்டூ மற்றும் மற்ற விஷயத்தில் தேவையில்லாமல் மூக்கை நுழைத்து பேசுகிறார். அதே போல ஜோவிகா எனக்கு படிப்பு வரவில்லை, சினிமாவில் நடிக்க போகிறேன் என்று தெளிவாக சொல்லிய பிறகும், ஏன் படிக்கவில்லை, உன் அம்மா சொன்னா இப்படித்தான் பேசுவியா என்று பேசுவது எல்லாம் நான்சென்ஸாக இருக்கு. ஜோவிகா வாழ்க்கையில் என்ன ஆகவேண்டும் என்பதில் தெளிவா இருக்கா தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு படத்தில் கமிட்டாகி இருக்கிறார் என்று நடிகை வனிதா விஜயகுமார் பேசினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X