பிரதீப் தகுதியான ஆளே கிடையாது.. அம்மணமா கூட வந்து நிப்பான்.. வெளுத்த வாங்கிய வனிதா!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிரதீப் ஆண்டனி தகுதியான ஆளே கிடையாது, அவன் கொஞ்ச நாள்ல அம்மணமா கூட வந்து நிப்பான் என்று வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 1ந் தேதி தொடங்கி பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி வெற்றிகரமாக 7 வாரத்தை எட்டி உள்ளது.
கடந்த ஆறு சீசன்கள் முடிவடைந்த நிலையில், இந்த ஏழாவது சீசன் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார்.

பிக் பாஸ் சீசன்7: கடந்த சீசன்களைப் போலவே இந்த சீசனிலும் விஜய் டிவியை பிரபலங்கள் பலர் இடம்பெற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரிலும் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் இதுவரை நடந்த எவிக்ஷனில் அனன்யா, விஜய் வர்மா, யுகேந்திரன், வினுஷா தேவி ஆகியோர் வெளியேறினர். மேலும், பவா செல்லத்துரை தானாகவே நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.
பிரதீப் ஆண்டனி: இந்நிலையில் இந்த வாரம் பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது. இவர் சக போட்டியாளர்களை கெட்ட வார்த்தையில் திட்டுகிறார் என்றும், பெண்களை வைத்து இரட்டை அர்த்தத்தில் பேசுகிறார் என்று நேற்று பலர் உரிமைக்குரல் கொடுத்ததை அடுத்து அவருக்கு கமல் ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பினார்.
சரியான முடிவு: இது குறித்து பேசிய வனிதா விஜயகுமார், யாருக்கும் பயப்படாமல் தங்களுடைய உரிமைக்காக நின்றவர்களுக்கு முதலில் நான் கைதட்டிக் கொள்கிறேன். பிரதீப் ஆண்டனிக்கு வாழ்க்கையில் நடந்த ஏதோ ஒரு மோசமான சம்பவம் நடந்து இருக்கு. அவர் மன ரீதியாக கடுமையான பாதிக்கப்பட்டு இருக்கிறார்.
வனிதா பேச்சு: இதனால் பிரதீப் என்ன செய்கிறார் என்று அவருக்கே தெரியவில்லை. கதவை திறந்து வைத்துக்கொண்டு நான் சிறுநீர் கழித்தேன் என்று சொல்கிறான். இன்னைக்கு இப்படி செய்தவன் நாளைக்கு பெண்கள் முன்பு அம்மணமாக வ்ந்து நின்று பார்த்துக்கோ பார்த்துக்கோ.. என்னை லவ் பண்ணுங்க.. லவ் பண்ணுங்க.. சொல்ல மாடானா.

பிக் பாஸ் வீட்டில் இருக்க பிரதீப் தகுதியான ஆளே கிடையாது, இந்த விஷயத்தில் நான் கமல்ஹாசனை எடுத்த முடிவை நான் பாராட்டுகிறேன் பெண் பாதுகாப்பிற்காக அவர் எடுத்த முடிவுதான் சரி என்று வனிதா பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











