Bigg Boss 7 - பிக்பாஸ் 7ல் ஏழரை கூல் சுரேஷ்தான்.. வீட்டுக்கு வெளியே இருந்தாலும் சீறும் வனிதா விஜயகுமார்

சென்னை: Bigg Boss 7 (பிக்பாஸ் 7) பிக்பாஸ் ஏழாவது சீசனில் கூல் சுரேஷ்தான் ஏழரை என்று நடிகை வனிதா விஜய்குமார் தெரிவித்திருக்கிறார்.

பிக்பாஸ் ஏழாவது சீசன் தொடங்கியிருக்கிறது. இதில், கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்ஸன், வினுஷா, விசித்திரா, மணிசந்திரா, விஷ்ணு விஜய், ஐஷு, அனன்யா ராவ், பவா செல்லதுரை, ஜோவிகா விஜயகுமார், யுகேந்திரன், சரவண விக்ரம், விஜய் வர்மா, மாயா, அக்‌ஷயா உதயகுமார் ஆகிய 18 பேர் போட்டியிட்டிருக்கின்றனர்.

Vanitha Vijayakumar Talks about Bigg Boss 7 Contestant Cool Suresh

கூல் சுரேஷ்: 18 போட்டியாளர்களில் கூல் சுரேஷ், யுகேந்திரன், விசித்திரா ஆகியோர் மட்டுமே பிரபலமடைந்தவர்களாக இருக்கின்றனர். குறிப்பாக கூல் சுரேஷ் வீட்டுக்குள் சென்றதிலிருந்து தனது நடவடிக்கைகளால் ஹவுஸ் மேட்ஸ் மத்தியில் ஃபன் மெட்டீரியலாக மாறியிருக்கிறார். குறிப்பாக பவா செல்லதுரை ஓட்டம் கதையை சொல்லி முடித்த பிறகு தனது மனைவியை நினைத்து சுரேஷ் உருகிய சம்பவமும் அரங்கேறியது.

நாமினேஷன் பிராசஸ்; இதற்கிடையே எப்போதும் இல்லாத மாதிரி இந்த முறை இரண்டாவது நாளிலேயே எவிக்‌ஷனுக்கான நாமினேஷன் பிராசஸ் ஆரம்பித்திருக்கிறது. அதில் பவா செல்லதுரை, அனன்யா, ஜோவிகா, பிரதீப், யுகேந்திரன் உள்ளிட்ட ஏழு பேர் இருக்கின்றனர். இவர்களில் யுகேந்திரனும் பிரதீப்பும் டேஞ்சர் ஸோனில் இருப்பதாக கூறப்படுகிறது. இருந்தாலும் முதல் வாரத்திலேயே எவிக்‌ஷன் இருக்குமா என்பது குறித்த சந்தேகமும் ரசிகர்களிடையே இருக்கிறது.

வனிதா பேட்டி: இந்நிலையில் பிக்பாஸ் முன்னாள் போட்டியாளரும் தற்போதைய பிக்பாஸில் கலந்துகொண்டிருக்கும் ஜோவிகாவின் தாயாருமான வனிதா விஜயகுமார் கூல் சுரேஷ் குறித்து ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். அவர் அளித்த பேட்டியில், "ஒவ்வொரு சீசனிலும் பிக்பாஸ் வீட்டுக்குள் ஒரு ஏழரை கொண்டுவரப்படுவார். இந்த முறை அந்த ஏழரை கூல் சுரேஷ்தான்.

ஜிபி முத்துவும் அவரும் ஒன்னு: கூல் சுரேஷ் செய்வது எதுவுமே எதார்த்தமானதாக இல்லை. தனக்கென்று அவர் ஒரு ஸ்டேட்டர்ஜியை வைத்திருக்கிறார். அவர் அதன்படிதான் விளையாண்டு வருகிறார். இவரை பார்க்கும்போது கடந்த சீசனில் கலந்துகொண்ட ஜிபி முத்துவும் இவரும் ஒன்று என்று தோன்றுகிறது. ஆனாலும் ஜிபி முத்துவை ஏழரை என்று கூற முடியாது. அவர் நல்ல மனிதர்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X