Vanitha - அடுத்த திருமணத்துக்கு தயாராகிவிட்டாரா வனிதா?.. அவரே சொன்ன பதில பாருங்க

சென்னை: நடிகை வனிதா சில படங்களில் நடித்திருக்கிறார். இதனையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஃபேமஸ் ஆனார். அதனையடுத்து அவர் பிக்பாஸ் வனிதா என்றே அழைக்கப்படுகிறார். அவரது மகள் ஜோவிகா சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் கலந்துகொண்டார். இந்த சூழலில் தனது திருமணம் குறித்து வனிதா பேசியிருக்கும் விஷயம் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

விஜயகுமாரின் மகளான வனிதா கோலிவுட்டில் சில படங்களில் கதாநாயகியாக நடித்தவர். விஜய்யுடன் சந்திரலேகா படத்திலும் நடித்தார். அதன் பிறகு சினிமாவிலிருந்து ஒதுங்கிய அவர் மூன்று திருமணங்களை செய்தார். ஆனால் அந்த திருமணங்கள் அனைத்துமே பிரிவில் முடிந்தன. இதற்கிடையே நடன அமைப்பாளர் ராபர்ட் மாஸ்டரை காதலித்தார். அந்தக் காதலும் பாதியில் முடிந்தது. இதனால் வனிதா மீது தொடர்ந்து சர்ச்சை வாசம் அடித்துக்கொண்டே இருக்கும்.

Vanitha Vijayakumar Talks about Her Next Marriage

பிக்பாஸ் வனிதா: இந்தச் சூழலில் அவர் பிக்பாஸில் கலந்துகொண்டார். பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தால் கண்டிப்பாக தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து வீடுகளிலும் பிரபல்யம் ஆகிவிடலாம் என்ற விதியின்படி வனிதாவும் தமிழ்நாடு முழுக்க மேலும் ஃபேமஸ் ஆனார். பிக்பாஸ் டைட்டிலை அவர் வெல்லாவிட்டாலும் போட்டியிலிருந்து வெளியேறிய பிறகு படவாய்ப்புகள் குவிந்துவருகின்றன. இதுவரை 17 படங்களில் நடித்திருப்பதாக கூறுகிறார் வனிதா.

வசந்தபாலனின் அநீதி: அந்தப் படங்களில் ஒன்று அநீதி. வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் , துஷாரா விஷயன் உள்ளிட்டோர் அந்தப் படத்தில் நடித்திருந்தனர். சில மாதங்களுக்கு முன்பு ரிலீஸான படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. முக்கியமாக வனிதா விஜயகுமாரின் நடிப்புக்கும் ரசிகர்களிடையே டீசண்ட்டான வரவேற்பே கிடைத்தது. மேலும் சில படங்களில் அவர் கமிட்டாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

வனிதாவின் திருமணம்: இதற்கிடையே வனிதா விஜயகுமாரின் திருமண விவகாரம் சர்ச்சைகளை சம்பாதித்தது குறிப்பிடத்தக்கது. முதலில் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டு பிறகு விவாகரத்து பெற்றார். அதன் பிறகு ராஜன் என்பவரை திருமணம் செய்தார். அதுவும் விவாகரத்தில் முடிந்தது. பிறகு நடன இயக்குநர் ராபர்ட்டுடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. கடைசியாக அவர் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அந்தத் திருமண வாழ்க்கையும் சரியாக இல்லாததால் அதிலிருந்து வெளியே வந்தார்.

வனிதா பேட்டி: இந்நிலையில் வனிதா அளித்த சமீபத்திய பேட்டியின்போது அவரிடம், அடுத்த திருமணம் எப்போது செய்துகொள்வீர்கள் என்று தொகுப்பாளர் கேள்வியை முன்வைத்தார். அதற்கு பதிலளித்த அவர், "ஏன் இந்த கேள்வியே அனைவரின் மண்டைக்குள்ளும் ஓடிக்கொண்டிருக்கிறது. நான் திருமணம் செய்துகொண்டால் என்ன செய்யாவிட்டால் என்ன என்று காட்டமாக பதிலளித்தார். இருந்தாலும் விடாத தொகுப்பாளர், உங்களுக்கு கருப்பான மாப்பிள்ளை வேண்டுமா இல்லை வெள்ளையான மாப்பிள்ளை வேண்டுமா என்று மீண்டும் கேள்வி கேட்டார்.

அதற்கு பதிலளித்த அவர், 'மாப்பிள்ளை பச்சையாக இருந்தால் நான் திருமணம் செய்துகொள்ளலாம் என்று இருக்கிறேன். குபேரன் மாதிரி இருக்க வேண்டும்' என்றார். முன்னதாக வனிதா கடைசியாக திருமணம் செய்துகொண்ட பீட்டர் பால் சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது உயிரிழப்புக்கு காரணம் அளவுக்கு அதிகமான மது பழக்கம்தான் என்றும் ஒரு தகவல் ஓடியது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X