ஜோவிகாவை விடுங்க.. வனிதாவின் இரண்டாவது மகள் என்ன செய்றாங்க தெரியுமா?

சென்னை: நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். சில படங்களில் நடித்த அவர் சினிமாவிலிருந்து காணாமல் போனார். அதற்கு பிறகு தனது வீட்டோடு ஏற்பட்ட பிரச்னைகள் காரணமாக அவ்வப்போது வெளியே தெரிந்த அவர்; பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பிக்பாஸுக்கு அநீதி, அந்தகன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இந்தச் சூழலில் அவர் தனது இரண்டாவது மகள் குறித்து பேசியிருக்கிறார்.

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவர் விஜயகுமார். அவரது மகள்களில் வனிதாவும் ஒருவர். சில படங்களில் ஹீரோயினாக நடித்த அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஃபேமஸ் ஆனார். வீட்டுக்குள் அவர் பேசிய ஒவ்வொரு விஷயமும் தடாலடியாகவே இருந்தது. அதேபோல் தான் கலந்துகொள்ளாத பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி தனது யூட்யூப் சேனலில் விமர்சனம் செய்கிறார். இப்படி ஒருபக்கம் பிஸியாக இருக்கும் அவர் படங்களிலும் நடித்துவருகிறார். அந்தவகையில் அநீதி, அந்தணன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

jovika vanitha vijayakumar

மகள் ஜோவிகா: இதற்கிடையே வனிதாவின் திருமண விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. முதலில் ஆகாஷ் என்ற நடிகரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் இருவரும் பிரிந்துவிட்டனர். அவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். அவர் இப்போது பிரபு சாலமனின் இயக்கத்தில் ஹீரோவாக அறிமுகமாகவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மகள் ஜோவிகாவும் பிக்பாஸின் கடந்த சீசனில் கலந்துகொண்டார். அவரும் திரைத்துறையில் இப்போது களமிறங்கியிருக்கிறார்.

பாதியில் முடிந்த திருமண உறவு: ஆகாஷை பிரிந்த வனிதா; இன்னொருவரை திருமணம் செய்துகொண்டார். அந்தத் திருமண உறவும் பாதியில் முடிந்தது. சூழல் இப்படி இருக்க மூன்றாவதாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொண்டார் வனிதா. கிறிஸ்தவ முறைப்படி நடந்த அந்தத் திருமணத்தில் வனிதாவின் மகள் ஜோவிகாவும் பங்கேற்றிருந்தார். அந்தப் புகைப்படங்கள் அச்சமயத்தில் மிகப்பெரிய ட்ரெண்டானது என்பது நினைவுகூரத்தக்கது. மூன்றாவது திருமண உறவும் பாதியில் முடிந்தது.

Mr & Mrs: பீட்டர் ரொம்பவே குடித்ததால்தான் வனிதா வெளியேறியதாக சிலர் சொல்கிறார்கள். இப்போது சிங்கிளாக இருக்கும் வனிதா நான்காவது திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார் என்று கடந்த சில மாதங்களாகவே பேச்சுக்கள் பலமாக ஓடின. நிலவரம் இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்பு கடற்கரையில் ராபர்ட்டின் கையை பிடித்து முட்டி போட்டு வனிதா அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியானது. அது முழுக்க முழுக்க திருமண அழைப்பிதழ் வடிவில் இருந்தது. ஆனால் அது திருமண அழைப்பிதழ் இல்லை இருவரும் இணைந்து நடிக்கும் MR&Mrs படத்தின் ப்ரோமோஷன் என்று உறுதியானது.

வனிதா பேட்டி: இதற்கிடையே வனிதாவுக்கு ஜோவிகா மட்டுமின்றி ஜெயா என்ற மகளும் இருக்கிறார். ஆனால் அவர் அவ்வளவாக வெளியே வருவதில்லைல. இந்நிலையில் ஜெயா குறித்து தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேசிய வனிதா, "ஜெயா இப்போது ஹைதராபாத்தில் இருக்கிறார். எட்டாவது வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறார். முக்கியமாக அவர் தனது பள்ளியில் நடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று பள்ளியின் லீடராக இருக்கிறார். அவர் அவரது அப்பாவுடன் இருக்கிறார். நானும் ஜெயாவின் தந்தையும் டீசண்ட்டாக பேசி; நான் பிஸியாக இருக்கிறேன் என்பதால் தனது அப்பாவுடன் ஜெயா இப்போது இருக்கிறார். எங்கேயும் காணாமல் எல்லாம் போகவில்லை" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X