மணிமேகலை சரியான அடாவடி.. பிரியங்கா கதறி அழுதா.. இதெல்லாம் ரொம்ப தப்பு.. வனிதா பேட்டி!

சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருந்த மணிமேகலை, பிரியங்காவுடன் சண்டை போட்டு வெளியேறினார். சோசியல் மீடியாவில் இது பெரும் பேசு பொருளாகி இருக்கும் நிலையில், இதுகுறித்து வனிதா பேட்டி அளித்துள்ளார்.

குக் வித் கோமாளி நான்கு சீசன்கள் வெற்றிகரமாக முடிந்து, ஐந்தாவது சீசன் நடுவர்கள், கோமாளிகள், போட்டியாளர்கள் என சின்ன சின்ன மாற்றங்களுடன் தொடங்கியது. இதில், பிரியங்கா டைட்டிலை வென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில், நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த மணிமேகலை நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவதாக சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டார். எல்லாவற்றிலும் மேலாக சுயமரியாதை முக்கியம் என்றும் இந்த சீசனில் குக்காக வந்த ஒரு பெண் அவர் வேலையை மறந்து ஆங்கர் போல் செயல்படுகிறார். என்னை வேலையைச் செய்ய விடாமல் ஆங்கர் வேலையில் அவர் குறுக்கிடுகிறார் என்றும் மணிமேகலை கூறியிருந்தார். மேலும் ஒரு சிலர் பிரியங்காவிற்கு ஆதரவாக கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் சிலர் மணிமேகலைக்கு ஆதரவளித்து வருகின்றனர்.

manimegalai priyanka vanitha

வனிதா பேட்டி: இந்நிலையில் இதுகுறித்து பேசிய வனிதா விஜயகுமார், அனைவருக்கும் சுயமரியாதை முக்கியம் தான், நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவது எல்லாம் சாதாரண விஷயம். நானும் ஜோடி மற்றும் பிக்பாஸ்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருக்கிறேன். ஆனால், இந்த விஷயத்தை ஊதி ஊதி பெருசா ஆக்கியது மீடியாக்கள் தான். மணி மேகலை, பிரியங்கா இரண்டு பேரையும் எனக்கு நன்றாகவே தெரியும். மணிமேகலை அடாவடி பெண்ணு தான். புருஷனையே வாடா போடா என்று தான் கூப்பிடுவா. ஆனால், இந்த விஷயத்தில் மணிமேகலை செய்வது தப்பு என்று தான் நான் சொல்லுவேன்.

manimegalai priyanka vanitha

மணிமேகலை பண்ணது தப்பு: இது ரெண்டு பொம்பளைங்களுக்குள் நடந்த சண்டை, இதில் யார் யாரோ மூக்கை நுழைத்து, இதுனாலத்தான் பிரியங்காவின் கணவர் அவளை விட்டு போய்விட்டார் என்று பேசுகிறார்கள். ஒரு பெண் கணவரோடு வாழ்ந்தால் நல்ல பெண், கணவரை விட்டு பிரிந்து இருந்தால் கெட்ட பெண்ணா. முதலில் விட்டு போய்விட்டார் என்று ஏன் சொல்ல வேண்டும். இருவரும் பிரிந்துவிட்டார்கள் அவ்வளவு தான். பிரியங்கா அப்படி, இப்படி என, பிரியங்காவின் கேரக்டர் பற்றி பலர் பேசுவதை மணிமேகலை என்கரேஜ் செய்து வருகிறார். நேற்று அவரின் வீடியோவைப் பார்த்தேன் அதில், சொம்புக்கு என்ன வேலை என்று கேட்டு தூக்கி அடிக்கிறார் இதெல்லாம் ரொம்ப தப்பு.

manimegalai priyanka vanitha

பாவம் பிரியங்கா: நான் மணிமேகலையிடம் பேசவில்லை, பிரியங்காவிடம் பேசினேன், அவர் இப்போது அயர்லாந்தில் இருக்கிறார். உடனே பயந்து ஓடிய பிரியங்கா என்று எழுதுகிறார்கள். எந்த ஒரு ஷோ முடிந்த பிறகும் வெளிநாட்டில் தான் ஓய்வு எடுப்பார்கள் இது இயல்பு அதற்குள் பயந்து ஓடிவிட்டார் என்று சொல்கிறார்கள். நான் என்ன ஆச்சு என்று கேட்டதும், அழுறா, என் குடும்பமே கடும் மன உளைச்சலில் இருக்கு அக்கா, என்று கதறா. அவர் கேரக்டரை வைத்து சிலர் பேசியது பிரியங்காவிற்கு கடும் மன வருத்தத்தை தந்து இருக்கு. இது ஒரு சின்ன சண்டை அதை இவ்வளவு பெருசா ஆக்க வேண்டுமா என்று வனிதா அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X