மணிமேகலை Vs பிரியங்கா.. செருப்பால அடிக்கணும்.. காட்டமான வனிதா விஜயகுமார்
சென்னை: நடிகை வனிதா சில படங்களில் நடித்திருக்கிறார். இதனையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஃபேமஸ் ஆனார். அதனையடுத்து அவர் பிக்பாஸ் வனிதா என்றே அழைக்கப்படுகிறார். அவரது மகள் ஜோவிகா சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் கலந்துகொண்டார். வனிதாவுக்கு ஏற்கனவே மூன்று முறை திருமணம் நடந்து முடிந்தது. இந்தச் சூழலில் அவர் மணிமேகலைக்கும் பிரியங்காவுக்கும் இடையே நடந்த சண்டை குறித்து பேசியிருக்கிறார்.
விஜயகுமாரின் மகளான வனிதா கோலிவுட்டில் சில படங்களில் கதாநாயகியாக நடித்தவர். விஜய்யுடன் சந்திரலேகா படத்திலும் நடித்தார். அதன் பிறகு சினிமாவிலிருந்து ஒதுங்கிய அவர் மூன்று திருமணங்களை செய்தார். ஆனால் அந்த திருமணங்கள் அனைத்துமே பிரிவில் முடிந்தன. இதற்கிடையே நடன அமைப்பாளர் ராபர்ட் மாஸ்டரை காதலித்தார். அந்தக் காதலும் பாதியில் முடிந்தது. இதனால் வனிதா மீது தொடர்ந்து சர்ச்சை வாசம் அடித்துக்கொண்டே இருக்கும்.

பிக்பாஸ் வனிதா: இந்தச் சூழலில் அவர் பிக்பாஸில் கலந்துகொண்டார். பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தால் கண்டிப்பாக தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து வீடுகளிலும் பிரபல்யம் ஆகிவிடலாம் என்ற விதியின்படி வனிதாவும் தமிழ்நாடு முழுக்க மேலும் ஃபேமஸ் ஆனார். பிக்பாஸ் டைட்டிலை அவர் வெல்லாவிட்டாலும் போட்டியிலிருந்து வெளியேறிய பிறகு படவாய்ப்புகள் குவிந்துவருகின்றன. இதுவரை 17 படங்களில் நடித்திருப்பதாக கூறுகிறார் வனிதா.
அநீதி, அந்தகன்: அந்தப் படங்களில் ஒன்று அநீதி. வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் , துஷாரா விஷயன் உள்ளிட்டோர் அந்தப் படத்தில் நடித்திருந்தனர். அதற்கு பிறகு மோகன் ரீ என்ட்ரி கொடுத்த ஹரா படத்திலும் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார் வனிதா. படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. அதேபோல் கடைசியாக பிரசாந்த் ஹீரோவாக நடித்த அந்தகன் படத்திலும் முக்கியமான வேடத்தை ஏற்றிருந்தார் வனிதார் விஜயகுமார்.
வனிதாவின் திருமணம்: இதற்கிடையே வனிதா விஜயகுமாரின் திருமண விவகாரம் சர்ச்சைகளை சம்பாதித்தது குறிப்பிடத்தக்கது. முதலில் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டு பிறகு விவாகரத்து பெற்றார். அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தார். அதன் பிறகு ராஜன் என்பவரை திருமணம் செய்தார். அதுவும் விவாகரத்தில் முடிந்தது. பிறகு நடன இயக்குநர் ராபர்ட்டுடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. கடைசியாக அவர் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அந்தத் திருமண வாழ்க்கையும் சரியாக இல்லாததால் அதிலிருந்து வெளியே வந்தார்.
மணிமேகலை Vs பிரியங்கா: இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலைக்கும், பிரியங்காவுக்கும் முட்டிக்கொண்டது. இதன் காரணமாக மணிமேகலை நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். கடந்த சில நாட்களாகவே இந்த டாபிக்தான் சின்னத்திரை உலகில் ஹெட்லைன்ஸாக இருந்தது. மணிமேகலை பிரியங்காவையும், அவருக்கு ஆதரவு தெரிவிப்பவர்களையும் தொடர்ந்து கலாய்த்து வீடியோக்களை போட்டுவருகிறார்.
வனிதா விஜயகுமார்: சூழல் இப்படி இருக்க வனிதா விஜயகுமார் இந்த விஷயம் குறித்து பேசுகையில், "மணிமேகலைக்கும் பிரியங்காவுக்கும் நடந்த சண்டையை ஊடகங்கள்தான் பெரிதாக்கிவிட்டன. ஆனால் ஒன்று, 'மணிமேகலை கணவருடன் இருக்கிறார். அவருக்கு சுயமரியாதை உண்டு. கணவரோடு இல்லாதவருக்கு சுயமரியாதை இல்லை என்று சொல்பவர்களை செருப்பால் மட்டும் இல்லை எதனால் வேண்டுமானாலும் அடிக்கலாம். கணவர் விட்டுவிட்டு போகவில்லை. பிரிந்துவிட்டார்கள். ஒருவர் பிரிவதற்கும் அந்தப் பெண்ணின் கேரக்டருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது' என்றார்.


Click it and Unblock the Notifications











