Vanitha: விஜயும் - உதயநிதியும் அரசியல் எதிரிதான்..ஆனால்,வனிதா சொன்ன அந்த விஷயம்!
சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் இன்று தஞ்சை பெரிய கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜய் மற்றும் உதயநிதி இருவருமே சினிமாவில் இருந்து அரசியல் வந்தவர்கள் தான், இருவருமே எனக்கு நண்பர்கள் தான் என்று பேட்டியில் கூறியுள்ளார்.
விஜயகுமாரின் மகளான வனிதா தற்போது சினிமா, பிஸ்னஸ், சோஷியல் மீடியா என அனைத்திலும் படு பிஸியாக இருக்கிறார். தற்போது பேட்டி அளித்துள்ள வனிதா, என் அப்பாவோட ஊர் தஞ்சாவூர் இங்கு இருந்து தான் அப்பாவோட வாழ்க்கை ஆரம்பித்தது. இதனால், எங்களில் ஆரம்ப வாழ்க்கை இங்கு இருந்து தான் ஆரம்பித்துள்ளது. இதுவரை நான் தஞ்சாவூர் கோவிலுக்கு வந்ததே இல்லை. இதுதான் முதன் முறை. அப்பா இந்த கோவிலை பற்றி நிறைய விஷயத்தை சொல்லி இருக்கிறார்.

முன்னோர்களின் ஆசி: ராஜ ராஜ சோழகன் கதைகளை படத்தில் பார்த்து இருக்கிறேன், படித்து இருக்கிறேன் ஆனால் முதன்முறையாக இத்தனை வருடத்திற்கு பிறகு இங்கு வந்து இருக்கிறேன். இங்கு ஒரு திருமணத்திற்காக வந்து இருந்தேன். அப்படியே கோவிலை பார்த்துவிடலாம் என்று வந்தேன். நான் வந்த நேரம் சதயவிழா இது எனக்கு தெரியாமல் தான் வந்தேன். என்னுடைய மகள் ஜோவிகா தயாரித்து நான் முதன் முதலாக இயக்கி இருக்கும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. ஒரு இயக்குநராக ஆவதற்கு முன்பு இந்த கோவிலில் ஆசீர்வாதம் வாங்கியது என்பதை என் முன்னோர்கள் எனக்கு கொடுக்கும் ஆசிர்வாதமாக நான் பார்க்கிறேன் என்றார்.
அரசியல் எதிர்கள்: தொடர்ந்து செய்தியாளர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து கேள்வி எழுப்பினர் இதற்கு பதில் அளித்த வனிதா, விஜய் அரசியலில் மிகப்பெரிய பரிமானத்தை எடுத்து இருக்கிறார் அதற்கு எனது வாழ்த்துக்கள். விஜய் நிச்சயமாக பெரிய வெற்றியை அடையனும். விஜயும், உதயநிதியும் சினிமாவிலிருந்து வந்தவர்கள் தான். இரண்டு பேரும் எதிரிகள் போல உள்ளனர். விஜய், உதயநிதி இருவருமே எனக்கு நண்பர்கள் தான், நல்ல தமிழகம் அமைவதற்கு யார் வந்தாலும் நான் அவர்களை ஆதரிப்பேன் என்று வனிதா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











