வனிதா விஜயகுமாரின் 3வது கணவர் திடீர் மரணம்…இறுதிச்சடங்குக்கு வனிதா செல்வாரா?
சென்னை : நடிகை வனிதா விஜயகுமாரின் மூன்றாவது கணவர் பீட்டல் பால் திடீரென உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மஞ்சுளா ஆகியோரின் மகள் தான் வனிதா. இவர் விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.
ஒரு சில படங்களில் நடித்து வந்த வனிதா, திருமணத்துக்கு பின் படங்களில் நடிப்பதிலிருந்து விலகினார்.

விவாகரத்து : வனிதா விஜயகுமார் 2000ம் ஆண்டு ஆகாஷ் என்பவருடன் திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை விவாகரத்து செய்தார். இதன்பின், 2007ம் ஆண்டு ஆனந்த் ஜெயராமனை திருமணம் செய்து கொண்ட வனிதா விஜயகுமார் கடந்த 2012 மன வருத்தம் காரணமாக அவரையும் பிரிந்தார்.
Recommended Video
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் : குடும்ப பிரச்சனை, மகன் பிரிவு, சொத்து தகராறு என ஏகப்பட்ட பிரச்சனைகளால் வனிதாவின் பெயர் டேமேஜ் ஆனது. அதே நேரம் சின்ன கேப்புக்கு பின்பு விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் அதிரடியாக பேசி போட்டியாளர்களிடையே சண்டையிட்டார். இருப்பினும் பிக் பாஸ் நிகழ்ச்சி இவருக்கு நல்ல தொடக்கமாக அமைந்தது.
மூன்றாவது திருமணம் : பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டிலை வென்றார். இதையடுத்து யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கிய போது, பீட்டல் பாலுடன் பழக்கம் ஏற்பட்டதை அடுத்து அவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். பீட்டர் பால் முதல் மனைவியை விவாகரத்து செய்யாத நிலையில்,வனிதா இவரை திருமணம் செய்து கொண்டது பெரும் சர்ச்சையாகி விவாதத்திற்குள்ளானது.

பீட்டர் பாலை பிரிந்தார் : திருமணமான கொஞ்ச நாட்களிலேயே வனிதா குடும்பத்தோடு கோவா சென்றிருந்தார். அப்போது பீட்டர் பாலுக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் சேர்த்து அவரை கவனித்து வந்தார். பின் உடல்நிலை சரியான போதும் பீட்டர் பால் குடியை நிறுத்தாமல் தொடர்ந்து குடித்துக்கொண்டே இருந்ததால், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள். திருமணத்திற்கு முன்னர் பீட்டர் பாலுக்கு அதிகப்படியான குடிப்பழக்கம் இருந்தது, இனி குடிக்கவே மாட்டேன் என்று கூறியிருந்தார். ஆனால், என்னை ஏமாற்றி விட்டார் என்று கதறி அழுது இருந்தார்.
திடீர் மரணம் : இந்நிலையில், கடந்த சில மாதமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த பீட்டர் பால் இன்று உயிரிழந்துவிட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது. பீட்டர் பாலுக்கு இருந்த குடி பழக்கமே இவரது மரணத்திற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. வனிதா, பீட்டர் பாலை விட்டு பிரிந்து இருந்தாலும், முன்னாள் கணவர் என்ற முறையில் அவருடைய இறுதிச்சடங்கில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துவாரா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











