வனிதா, ராதிகா உள்ளிட்ட பிரபலங்கள் மகள்கள் தினத்தை எப்படி கொண்டாடுறாங்க பாருங்க #DaughtersDay

சென்னை: மகள்கள் தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. நடிகைகள் வனிதா விஜயகுமார், ராதிகா உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்கள் மகள்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பெண் குழந்தைகளை போற்ற வேண்டும் என்பதற்காகவும், ஆண் குழந்தைகளுக்கு நிகராக பெண் குழந்தைகளையும் நினைக்க வேண்டும் என்பதற்காகவும் தான் மகள்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

கள்ளிப் பால் கொடுத்து பெண் குழந்தைகளை கொன்ற சமூகம் மாறினாலும், இன்னமும் பெண் குழந்தையை பெற்றுக் கொள்ள பலரும் விரும்புவதில்லை என்பதே மறுக்க முடியாத உண்மையாக உள்ளது.

மகா லக்‌ஷ்மி

மகா லக்‌ஷ்மி

வீட்டில் பெண் குழந்தை பிறந்தால், மகா லக்‌ஷ்மி பிறந்தது என்று நம் நாட்டில் அழைக்க காரணமும், பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்துத் தான் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் குழந்தை பெண்ணாக பிறந்து விட்டால், இரண்டாவது குழந்தை பெண்ணாக பிறக்கக் கூடாது என படித்த அறிவாளிகள் கூட இன்னமும் வேண்டிக் கொள்வது வேடிக்கையான ஒன்று.

மோசமான சூழல்

மோசமான சூழல்

பெண்ணாக பிறந்து விட்டாலே பொதுவாகவே அவர்கள் மனதில் பாதுகாப்பு குறித்த அச்சம் எழுவதை சிறு வயதிலேயே பெற்றோர்களும், இந்த சமூகமும் உருவாக்கி விடுவது தான் இதில் கொடுமையான விஷயமே. பெண் பிள்ளைகளை அடங்கி நடக்க சொல்லிக் கொடுக்கும் சமூகம், ஆண் பிள்ளைகளுக்கு பெண்களை மதிக்க கற்றுக் கொடுத்தாலே இந்த சமூகம் சீரான ஒன்றாக மாறும்.

மகளுக்கு முத்தம்

மகளுக்கு முத்தம்

நடிகை வனிதா விஜயகுமாருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மகள்கள் தினத்தை முன்னிட்டு, தனது மகள்களுடன் எடுத்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார் வனிதா. மேலும், மகளுக்கு அவர் பாசத்தோடு முத்தம் கொடுக்கும் புகைப்படமும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

மகள்கள் மற்றும் கணவருடன்

மகள்கள் மற்றும் கணவருடன்

கணவர் சரத்குமார், வரலக்‌ஷ்மி சரத்குமார் மற்றும் தனது மகள்களுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படத்தை பதிவிட்டு வேற லெவலில் மகள்கள் தினத்தை நடிகை ராதிகா சரத்குமார் சமூக வலைதளத்தில் கொண்டாடி வருகிறார். விஜய்சேதுபதி, டாப்சி நடிக்கும் படத்திற்காக ஜெய்ப்பூரில் இருக்கும் அவர், ட்விட்டரில் த்ரோபேக் புகைப்படங்களை பதிவிட்டு #HappyDaughtersDay love you all crazy girls என ட்வீட் போட்டுள்ளார்.

அஜய் தேவ்கன் மகள்

அஜய் தேவ்கன் மகள்

ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்து வரும் பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், தனது மகள், நைசாவின் புகைப்படத்தை பகிர்ந்து மகள்கள் தினத்தை கொண்டாடி உள்ளார். இளம் மங்கையாக பலருக்கும் தெரியலாம். ஆனால், எனக்கும் கஜோலுக்கும் அவள் எப்போதுமே குழந்தை தான் என பாசத்தை பிழிந்துள்ளார்.

மகளுடன் அக்‌ஷய்

மகளுடன் அக்‌ஷய்

பெர்ஃபெக்ட் என்பதற்கு எனக்கான அர்த்தமே நீ தான் என மகள் நித்தாரா குமாருடன் அக்‌ஷய் குமார் இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்து ஐ லவ் யு சோ மச் பேபி என பதிவிட்டு மகள்கள் தின வாழ்த்துக்களை கூறியுள்ளார். அக்‌ஷய் குமாரின் மகளுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும், பல பிரபலங்களும் தங்கள் மகள்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X