இளையராஜாவுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை.. இமேஜை டோட்டல் டேமேஜ் செய்த வனிதா விஜயகுமார்.. அந்தணன் ஓபன்!

சென்னை: வனிதா விஜயகுமார் தனது மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தில் இளையராஜாவின் பாடலை பயன்படுத்தியதற்கு எதிராக இளையராஜா வழக்குத் தொடர்ந்த நிலையில், இளையராஜா வீட்டுக்கே மருமகளாக சென்றிருக்க வேண்டியவள் நான் என வனிதா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த இழிவு இளையராஜாவுக்கு தேவையா என பத்திரிகையாளர் அந்தணன் பேசியுள்ளார்.

தனது முன்னாள் காதலரான ராபர்ட் மாஸ்டருடன் இணைந்து வனிதா விஜயகுமார் நடித்த கில்மா படம் திரையரங்குகளில் ஒரு ஷோ கூட ஹவுஸ் ஃபுல் ஆகாமல் வாஷ் அவுட் ஆகிவிட்டதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

Vanitha Vijayakumar totally damaged Ilaiyaraaja s image told by Journalist Anthanan

இப்படியொரு படத்தில் தனது பாடலை பயன்படுத்தியதற்காக இளையராஜா ராயல்டி கேட்டு கேஸ் போட்டது அவருக்குத்தான் அவப்பெயரை கொண்டு வந்து சேர்த்திருக்கிறது என அந்தணன் தனது கருத்துக்களை முன் வைத்துள்ளார்.

இளையராஜாவிடம் அனுமதி பெற்ற வனிதா விஜயகுமார்: எனக்கு பணம் காசு எல்லாம் முக்கியமில்லை. என் பாடல்களை பயன்படுத்துவதற்கு முன்பாக என்னிடம் வந்து அனுமதியாவது வாங்க வேண்டும் என இளையராஜா கூறியிருந்தார். அவர் சொன்னதை காதில் வாங்கிய வனிதா விஜயகுமார் முறைப்படியே அவரை சந்தித்து ஆசி வாங்கி, என் படத்துல உங்க பாடலை பயன்படுத்தியிருக்கேன் எனக் கூறியிருக்கிறார். அப்போதெல்லாம் அமைதியாக இருந்துவிட்டு படம் வெளியான பின்னர், கோர்ட்டில் கேஸ் போட்டது ஏன்? என்கிற கேள்வியை அந்தணன் எழுப்பியுள்ளார்.

ஒரு லட்சம் கிடைக்குமா?: வனிதா விஜயகுமார் சுமார் 4 கோடி தனது சொந்த காசை போட்டு இந்த படத்தை உருவாக்கியதாக கூறுகிறார். படம் பாக்ஸ் ஆபீஸில் பெரிதாக வசூல் ஈட்டவில்லை. அவரே பெரும் போராட்டத்திற்கு பிறகு தான் இந்த படத்தை ரிலீஸ் செய்திருக்கிறார். பெரிய மனதுடன் இளையராஜா விட்டுக் கொடுத்திருந்தால், எந்த பிரச்சனையும் வந்திருக்காது. அப்படியே ராயல்டி கிடைத்தால், என்ன ஒரு 50 ஆயிரம் அல்லது ஒரு லட்சம் கிடைக்குமா? இப்போ ஒட்டுமொத்த குடும்ப மானமும் காத்துல பறக்குதே என அந்தணன் இளையராஜா வனிதா விஷயத்தில் அவசரப்பட்டு விட்டார் என்று பேசியுள்ளார்.

Vanitha Vijayakumar totally damaged Ilaiyaraaja s image told by Journalist Anthanan

கார்த்திக் ராஜா இல்லைன்னா அப்போ யாரு?: இளையராஜா வீட்டில் சிறு வயதில் இருந்தே அப்பா விஜயகுமாருடன் வந்து சென்றவர் தான் வனிதா விஜயகுமார். இளையராஜா மகன்களுடன் எல்லாம் அவர் விளையாடியிருக்கிறார். நன்றாக பழகியும் உள்ளார். இளையராஜாவின் வீட்டுக்கே மருமகளாக வந்திருக்க வேண்டியவள் நான் என வனிதா விஜயகுமார் பெரிய குண்டை தூக்கிப் போட்டு விட்டு அது கார்த்திக் ராஜா இல்லை என்றும் கூறியுள்ளார். அப்போது, யுவன் சங்கர் ராஜாவின் பெயரும் சேர்ந்து அடிவாங்குகிறது. இமய மலையாகவும் கடவுளாகவும் ரசிகர்கள் இளையராஜாவை பார்த்துக் கொண்டிருக்கும் போது, வனிதா மீது தேவையில்லாமல் வழக்கு போட்டு டோட்டல் டேமேஜ் ஆக வேண்டுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.

குவியும் மீம்ஸ்: வனிதா மீது ராயல்டி கேட்டு மட்டுமல்ல மான நஷ்ட வழக்கையும் சேர்த்து இளையராஜா போட வேண்டும் என ஏகப்பட்ட மீம்களும் சோஷியல் மீடியா முழுக்க பரவி வருகிறது. இந்த வழக்கு தொடர்ந்து கொண்டே சென்றால், வனிதா இன்னும் என்ன என்ன குண்டுகளை போடுவார் என்றே தெரியவில்லை என அந்தணன் புலம்பித் தள்ளியிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X