Bigg Boss 7: டாட்டூ போட்டா..தம்மடிச்சா உனக்கு என்ன? விசித்ராவை விளாசிய வனிதா விஜயகுமார்!

சென்னை: மகள் ஜோவிகாவை விமர்சித்த விசித்ராவை வனிதா விஜயகுமார் கடுமையாக விளாசினார்.

இதில், அவரவர் வாழ்க்கை குறித்தும் அவர்களின் தொழில் குறித்தும் பேசினார்கள். அப்போது,வனிதாவின் மகன் ஜோவிகா, தான் பள்ளிப்படிப்பை 8ஆம் வகுப்போடு நிறுத்திக் கொண்டதாகவும் அதற்கு மேல் தனக்கு படிப்பு வராததால் நடிப்பில் டிப்ளமோ படித்தாகவும் கூறினார்.

ஜோவிகா தான் பள்ளிப்படிப்பை தொடரவில்லை என்று கூறியதையடுத்து விசித்ரா அவரை கடுமையாக விமர்சித்து இருந்தார்.

Vanitha Vijayakumar trolled Vichitra for criticizing her daughter Jovika

பிக் பாஸ் சீசன் 7: இதையடுத்து, ஜோவிகா, என்னுடைய பர்சனல் பக்கமான படிப்பை பற்றி பேச வேண்டாம் என்று இவரிடம் நான் சொன்னேன். நாங்கள் வேறு கட்டத்திற்கு வந்து விட்டோம். தயவு செய்து அதனை இழுக்க வேண்டாம் என்று சொன்னேன். படிப்பு வரவில்லை என்றால், உனக்கு எதில் திறமை இருக்கிறதோ, அதில் கவனம் செலுத்த வேண்டும் அதுதான் என்னிடைய நிலைப்பாடு என்றார்.

கல்விதான் கலங்கரை விளக்கம்: இதனையடுத்து பேசிய கமல்ஹாசன், உங்களுக்கு பரிந்து பேசுவதாக நினைத்து விடாதீர்கள். உயிரைக்கொடுத்தாவது படிக்க வேண்டும் என்று சொல்வது முக்கியமில்லை என்று நினைக்கிறேன். 8 ஆவது வரை படித்து இருக்கிறீர்கள், ஆகையால் நீங்கள் நம்ம ஆளு. கல்விதான் கலங்கரை விளக்கம். ஆனால், அதற்கு முதலில் நான் எங்கே இருக்கிறேன் என்று தெரிய வேண்டும் அல்லவா?. நான் காட்டில் இருந்து கொண்டு கலங்கரை விளக்கத்தை பார்த்துக்கொண்டு இருக்கக்கூடாது என்றார்.

புலம்பிய விசித்ரா: விசித்ராவின் எண்ணத்தையும் நான் இந்த விஷயத்தில் தவறு என்று சொல்ல மாட்டேன். அதே போல, ஜோவிகாவின் எண்ணத்தையும் தவறு என்று பேச மாட்டேன் என்று பிரச்சனையை முடித்து வைத்தார். இதையடுத்து விசித்ரா, என்னுடைய குழந்தை மாதிரி நினைச்சு தான் ஜோவிகாவிடம் பேசினேன், ஆனா அவ ஒரு போட்டியாளர் மாதிரி என்னை பார்க்கிறார் என்று விசித்ரா அழுது புலம்பினார்.

Vanitha Vijayakumar trolled Vichitra for criticizing her daughter Jovika

ஓவரா அக்கறை காட்டாதீங்க: இதையடுத்து, நடிகை வனிதா மகள் ஜோவிகாவிற்காக களத்தில் குறித்துள்ளார். அதில், பிக் பாஸ் வீட்ல இருக்க பொண்ணுங்க டாட்டூ போடுது, தம் அடிக்குது. இது எல்லாம் அவங்க பெற்றோர்கள் பார்த்துக் கொள்வார்கள். ஆனா அங்க இருக்கிற பிள்ளைங்களை எல்லாம் நீங்கதான் பெத்து பிள்ளைகள் மாதிரி ஓவரா அக்கறை காட்ட வேண்டாம்.

என்ன நேந்தா விட்டிருக்காங்களா: பிக் பாசுக்கு வந்த பிள்ளைகளை எல்லாம் உங்களுக்கு என்ன நேந்தா விட்டிருக்காங்க. நீங்கள் மூன்று பசங்களோட அம்மாவாக இருக்கலாம் அதற்காக பிள்ளைகளை ஓவரா கரெக்ஷன் பண்ண வேண்டாம். நீங்க முதலில் உங்க பிள்ளைங்களை பாருங்க. எதுக்காக நீங்க 100 நாள் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தீங்களோ அந்த வேலையை மட்டும் பாருங்க தேவை இல்லாமல் எல்லா விஷயத்திலும் மூக்கை நுழைக்காதீர்கள் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X