பவர் ஸ்டாரை திருமணம் செய்திருக்கிறேன்.. ஒன்னும் நடக்கல.. அதிர்ச்சி கிளப்பிய வனிதா விஜயகுமார்
சென்னை: நடிகை வனிதா சில படங்களில் நடித்திருக்கிறார். இதனையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஃபேமஸ் ஆனார். அதனையடுத்து அவர் பிக்பாஸ் வனிதா என்றே அழைக்கப்படுகிறார். அவரது மகள் ஜோவிகா சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் கலந்துகொண்டார். வனிதாவுக்கு ஏற்கனவே மூன்று முறை திருமணம் நடந்து முடிந்தது. இந்தச் சூழலில் சினிமா மேடையில் வனிதா பேசியிருக்கும் விஷயம் ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
விஜயகுமாரின் மகளான வனிதா கோலிவுட்டில் சில படங்களில் கதாநாயகியாக நடித்தவர். விஜய்யுடன் சந்திரலேகா படத்திலும் நடித்தார். அதன் பிறகு சினிமாவிலிருந்து ஒதுங்கிய அவர் மூன்று திருமணங்களை செய்தார். ஆனால் அந்த திருமணங்கள் அனைத்துமே பிரிவில் முடிந்தன. இதற்கிடையே நடன அமைப்பாளர் ராபர்ட் மாஸ்டரை காதலித்தார். அந்தக் காதலும் பாதியில் முடிந்தது. இதனால் வனிதா மீது தொடர்ந்து சர்ச்சை வாசம் அடித்துக்கொண்டே இருக்கும்.

பிக்பாஸ் வனிதா: இந்தச் சூழலில் அவர் பிக்பாஸில் கலந்துகொண்டார். பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தால் கண்டிப்பாக தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து வீடுகளிலும் பிரபல்யம் ஆகிவிடலாம் என்ற விதியின்படி வனிதாவும் தமிழ்நாடு முழுக்க மேலும் ஃபேமஸ் ஆனார். பிக்பாஸ் டைட்டிலை அவர் வெல்லாவிட்டாலும் போட்டியிலிருந்து வெளியேறிய பிறகு படவாய்ப்புகள் குவிந்துவருகின்றன. இதுவரை 17 படங்களில் நடித்திருப்பதாக கூறுகிறார் வனிதா.
வசந்தபாலனின் அநீதி: அந்தப் படங்களில் ஒன்று அநீதி. வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் , துஷாரா விஷயன் உள்ளிட்டோர் அந்தப் படத்தில் நடித்திருந்தனர். அதற்கு பிறகு மோகன் ரீ எண்ட்ரி கொடுத்த ஹரா படத்திலும் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார் வனிதா. படம் சுமாரான வரவேற்பையே பெற்றது.மேலும் சில படங்களில் அவர் கமிட்டாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
வனிதாவின் திருமணம்: வனிதா விஜயகுமாரின் திருமண விவகாரம் சர்ச்சைகளை சம்பாதித்தது குறிப்பிடத்தக்கது. முதலில் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டு பிறகு விவாகரத்து பெற்றார். அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தார். அதன் பிறகு ராஜன் என்பவரை திருமணம் செய்தார். அதுவும் விவாகரத்தில் முடிந்தது. பிறகு நடன இயக்குநர் ராபர்ட்டுடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. கடைசியாக அவர் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அந்தத் திருமண வாழ்க்கையும் சரியாக இல்லாததால் அதிலிருந்து வெளியே வந்தார்.
பவர் ஸ்டாருடன் திருமணம்: இதற்கிடையே சில வருடங்களுக்கு முன்பு பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு வனிதா மாலை போடுவது போல் ஒரு போஸ்டர் வெளியானது. அதனைப் பார்த்த ஒருதரப்பினர் இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள் என்று கிளப்பிவிட்டார்கள். ஆனால் அது அவர்கள் இருவரும் இணைந்து நடித்த பிக்கப் படத்தின் போஸ்டர் என்பது பின்னர் உறுதியானது. இந்நிலையில் வனிதா இப்போது வைஜெய்ந்தி ஐபிஎஸ் என்ற படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படத்தின் விழா சென்னையில் நடந்தது. இதில் பவர் ஸ்டாரும் கலந்துகொண்டார்.
கலாய்த்துக்கொண்ட இருவர்: அந்த விழாவில் பேசிய பவர் ஸ்டார் எனது தோழி வனிதாவை நீண்ட காலத்துக்கு பிறகு சந்திக்கிறேன் என்று கூறினார். உடனே பேச்சை இடைமறித்த வனிதா, 'தோழியா?.. நமக்கு திருமணமே செய்து வைத்துவிட்டார்கள். நான் வெளியூருக்கு போகையில் நீங்கள் பவர் ஸ்டார் பவன் கல்யாணை திருமணம் செய்துகொண்டீர்களா என்று கேட்கிறார்கள். இல்லை இல்லை நான் பவர் ஸ்டார் சீனிவாசனைத்தான் திருமணம் செய்திருக்கிறேன் என்று சொல்வேன். உங்களை திருமணம் செய்து ஒன்னும் நடக்கவில்லை’ என்று கலாய்த்தார். அதற்கு உடனே பவர் ஸ்டாரோ, ’என்ன செய்வது. நீங்கள் தாய்லாந்து போய்டுறீங்க. நானும் இங்கு இருப்பதில்லை. ஒருநாள் ஹனிமூனுக்கு நாள் குறித்துவிடலாம்’ என்றார். இருவரது இந்த கலகலப்பான உரையாடல் ட்ரெண்டாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











