விஜய்யை போட்டு அப்படி நச்சரிப்பேன்.. எஸ்.பி.பியின் அந்த பாட்டை பாடச் சொல்லி.. வனிதா ட்வீட்!

சென்னை: மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த நடிகை வனிதா விஜயகுமார், நடிகர் விஜய் குறித்தும் ட்வீட் செய்துள்ளார்.

சண்டை, சச்சரவுகள் எல்லாம் மாயமாய் மறைந்துள்ள நிலையில், விஜய் டிவியில் ஏகப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கலக்கி வருகிறார் வனிதா விஜயகுமார்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 4ன் பிரம்மாண்ட துவக்க விழா நிகழ்ச்சியிலும் இவர் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

எஸ்.பி.பிக்கு இரங்கல்

எஸ்.பி.பிக்கு இரங்கல்

இசை துறையில் ஏகப்பட்ட சாதனைகளை படைத்து விட்டு தாமரைப்பாக்கத்தில் மீளா துயில் கொண்டிருக்கும் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மறைவு செய்தி அறிந்த உடனே நடிகை வனிதா விஜயகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து ட்வீட் போட்டிருந்தார்.

ஆமாம் உண்மை தான்

ஆமாம் உண்மை தான்

எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மறைவு செய்தி அறிந்து சோகத்தில் இருக்கும் நடிகை குஷ்பு, நம்முடன் இருப்பவர்கள் இருக்கும் போது அவர்களை பற்றித் தெரியாது. இல்லாமல் நினைவாகும் போது தான் அவர்களின் உண்மையான மதிப்பு புரிகிறது என பதிவிட்டு இருந்தார். அந்த ட்வீட்டை ஷேர் செய்த நடிகை வனிதா விஜயகுமார். ஆமாம்.. உண்மை தான் என்று ரீட்வீட் செய்திருந்தார்.

டிரெண்டான விஜய்

டிரெண்டான விஜய்

பாடும் நிலா பாலுவின் இறுதி சடங்கில் சினிமா உலகின் முன்னணி நடிகர்கள் யாரும் கலந்து கொள்ளாத நிலையில், நடிகர் விஜய் கலந்து கொண்டது. ரசிகர்களின் காலணியை எடுத்துக் கொடுத்தது என ஒட்டுமொத்த தளபதி ரசிகர்களையும் நெகிழ வைத்து விட்டார். ஏகப்பட்ட பிரபலங்கள் விஜய்க்கு நன்றி தெரிவித்தனர். நடிகை வனிதா விஜயகுமாரும் விஜய், எஸ்.பி.பி பற்றிய ஒரு ட்வீட்டை போட்டுள்ளார்.

விஜய்யை நச்சரிப்பேன்

விஜய்யை நச்சரிப்பேன்

தளபதி விஜய்யுடன் சந்திரலேகா படத்தில் நாயகியாக நடித்துள்ளார் நடிகை வனிதா விஜயகுமார். இந்நிலையில், தற்போது பதிவிட்டுள்ள ட்வீட்டில், எஸ்பிபி பாடிய மலரே மெளனமா பாடலை பலமுறை பாட சொல்லி விஜய்யை நச்சரிப்பேன். அவர் என்னை ஒரு மாதிரி லுக் விட்டு பார்த்துட்டு எனக்காக பாடுவார் என ஒரே ட்வீட்டில் எஸ்.பி.பியையும் விஜய்யையும் பற்றி பதிவிட்டு வைரலாக்கி வருகிறார் வனிதா விஜயகுமார்.

நம்புற மாதிரியா இருக்கு

நம்புற மாதிரியா இருக்கு

நடிகை வனிதா விஜயகுமார் ட்வீட் போட்டாலே அதற்கு ஆதரவும் எதிர்ப்புகளும் குவிவது வழக்கம். எஸ்பிபி குறித்து மேலும் சுவாரஸ்ய தகவல்களை பதிவிடுங்க அக்கா என அவரது ரசிகர்களும், இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு என ஹேட்டர்ஸ்களும் ட்ரோல் செய்து வருகின்றனர்.

நியூ லுக்

நியூ லுக்

சமீபத்தில் விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வனிதா விஜயகுமார், அதற்காக செய்து கொண்ட மேக்கப்புடன் ஆளே மாறி இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் #NewProfilePic என போட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள், அழகா இருக்கீங்க என்றும், ஹேட்டர்கள் ஏசியன் பெயிண்ட்ஸ் எனவும் கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X