சோஷியல் மீடியா புரொமோஷனை விட இது முக்கியம்.. விஜய், ரஜினி, கமல், சூர்யாவுக்கு வனிதா திடீர் ட்வீட்
சென்னை: சமூக வலைதளங்கள் நெகட்டிவிட்டியில் நிறைந்து காணப்படுகின்றன. தயவு செய்து உங்கள் ரசிகர்களுக்கு நல்ல கருத்துக்களை எடுத்து சொல்லுங்கள் என நடிகர்கள் விஜய், ரஜினிகாந்த், கமல் மற்றும் சூர்யாவுக்கு நடிகை வனிதா விஜயகுமார் ட்விட்டரில் கோரிக்கை வைத்துள்ளார்.
Recommended Video
மாற்றி மாற்றி புகார் கொடுத்துக் கொண்ட நிலையில், யாருக்கு எத்தனை கோடி கிடைத்தது என்று விவரம் தெரியாமல் ரசிகர்கள் அந்த டாப்பிக்கை மாற்றி விட்டு, அடுத்த ஹாட் டாப்பிக்குக்கு சென்று விட்டனர்.
ஆனாலும், நான் இன்னும் ஆக்டிவாகத் தான் இருக்கேன் என வனிதா விஜயகுமார் மீண்டும் ஒரு பரபரப்பு ட்வீட் ஒன்றை போட்டுள்ளார்.

ரசிகரின் மரணம்
குடும்ப பிரச்சனை காரணமாக தளபதி விஜய்யின் ரசிகர் பாலா எனும் இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். மாஸ்டர் படம் பார்க்காமலே விடை பெறுகிறேன் என அவர் பதிவிட்ட ட்வீட் அனைத்து தளபதி ரசிகர்களையும் ஆழ்ந்த துயரில் ஆழ்த்தி இருக்கிறது. இந்நிலையில், அதை வைத்து வனிதா விஜயகுமார் ஒரு ட்வீட்டை போட்டுள்ளார்.

நெகட்டிவிட்டி நிறைஞ்சிருக்கு
சமூக வலைதளத்தை திறந்தாலே #rip #apologise #justicefor என ஒரே நெகட்டிவ் டேக்குகளாகத் தான் நிறைந்து காணப்படுகின்றன. ஹேப்பி ஹாஷ்டேக்குகள் எதுவும் இல்லை என பதிவிட்டுள்ளார் நடிகை வனிதா விஜயகுமார். மேலும், ந்டிகர்கள் உங்கள் ட்விட்டர் பக்கங்கள் மூலம் பாசிட்டிவ் கருத்துக்களை ரசிகர்கள் மனங்களில் விதையுங்கள் எனவும் ஆலோசனை கூறியுள்ளார்.

சோஷியல் மீடியா புரொமோஷன்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் சோஷியல் மீடியாவை புரொமோட் செய்யும் விதமாக பதிவுகளை போடாமல், ரசிகர்களின் மனக் கஷ்டங்களையும் பிரச்சனைகளையும் தீர்க்கும் வகையில் கருத்துக்களை பதிவிட வேண்டும் என்றும், இந்த நேரத்தில் அது நிறைய இளைஞர்களுக்கு தேவைப்படுகிறது என்றும் வனிதா பதிவிட்டுள்ளார்.

விஜய், ரஜினி, கமல், சூர்யா
முன்னணி நட்சத்திரங்களான விஜய், ரஜினிகாந்த், கமல் மற்றும் சூர்யாவை டேக் செய்து இந்த விஷயத்தை பகிர்ந்துள்ளார் நடிகை வனிதா விஜயகுமார். தளபதி விஜய்யின் ரசிகர் பாலா அவரது குடும்ப பிரச்சனைக்காக இறந்துள்ள நிலையில், அதற்காக பிரபலங்கள் என்ன செய்ய முடியும் என்று வனிதாவின் ட்வீட்டுக்கு கீழே நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

விஜய் தான் உங்க டார்கெட்
ஊருக்கே உபதேசம் பண்றீங்க, முதல்ல நீங்க நெகட்டிவிட்டிய பரப்பாம இருந்தா சரி என்றும், தளபதி விஜய் மரக்கன்று நடும் புகைப்படத்தை பதிவிட்டது தான் சோஷியல் மீடியா புரொமோஷன் எனக் குறிப்பிடுகிறீர்களா? என்றும் வனிதாவின் ட்வீட்டுக்கு கீழே விஜய் ரசிகர்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications