ஷாப்பிங் ஃபிரம் ஹோமாம்.. வனிதா அக்கா பண்ற அட்டகாசத்த பாருங்க.. வேற லெவல்!
சென்னை: நடிகை வனிதா ஷேர் செய்துள்ள வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அய்யோ என்ன ஆச்சு என பதறியுள்ளனர்.
சர்ச்சைகளுக்கு பெயர் போன நடிகைகளில் ஒருவர் வனிதா விஜயகுமார்.
திருமணம், விவாகரத்து, சொத்துப் பிரச்சனை என அடிக்கடி செய்திகளில் அடிப்பட்டு வந்த அவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி பெரிய பிரேக்கை கொடுத்தது.

டிவி நிகழ்ச்சியில்
அதனை தொடர்ந்து குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்று வின்னரான வனிதா, சமையலுக்கான யூட்யூப் சேனல் ஒன்றை தொடங்கினார். தொடர்ந்து கலக்கப்போவது யார் உட்பட விஜய் டிவியின் மேலும் சில நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.

நடமாடும் நகைக்கடை
இந்நிலையில் நடிகை வனிதாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அனல் காற்று என்ற படத்தில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து நடமாடும் நகைக்கடை ஹரி நாடாரின் 2கே அழகானது காதல் என்ற படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார் வனிதா.
Recommended Video

இன்ஸ்டாவில் வீடியோ
மேலும் இந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான அந்தாதுன் படத்தின் ரீமேக்கான அந்தகன் படத்திலும் நடிகை வனிதா நடிக்க உள்ளார். சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக உள்ள வனிதா, தற்போது ஒரு வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
என்ன ஆச்சு உங்களுக்கு?
ஷாப்பிங் ஃபிரம் ஹோம் என விதவிதமாக டிரெஸ் வாங்கி அணிந்துள்ளார் வனிதா. ஒவ்வொரு ஆடையாய் மாற்றி மாற்றி உடுத்தி நடனமும் ஆடியுள்ளார். அதனை பார்த்த பலர் க்யூட் என்று கூறிய போதும் சிலர் என்ன ஆச்சு உங்களுக்கு நல்லாதானே இருந்தீங்க என்று கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











