நீயா பேசியது.. பிக் பாஸை தடை பண்ணுங்க.. ஜோவிகா வெளியே வந்ததும் வனிதா என்ன இப்படி சொல்றாரு?
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி ரொம்பவே டாக்ஸிக் ஆன நிகழ்ச்சி என்றும் நல்லவேளை என் பொண்ணு ஜோவிகா வெளியே வந்து விட்டாள். உடனடியாக இந்த நிகழ்ச்சியை தடை செய்யுங்க என நடிகையும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான வனிதா விஜயகுமார் ட்வீட் போட்டு விட்டு டெலிட் செய்துள்ளார்.
மேலும், எக்ஸ் தளத்தை விட்டே மீண்டும் செல்லப் போவதாக அறிவித்து தனது ட்வீட்களை டெலிட் செய்து வருகிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை ஃபேக் டிராமா என்றும் இதற்கு விமர்சனம் ஒரு கேடா என இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியை விமர்சித்து வந்த வனிதா விஜயகுமார் பதிவிட்டு இருப்பது ரசிகர்களை சிரிப்பில் ஆழ்த்தி உள்ளது.
ஜோவிகா வெளியேற்றம்: பிக் பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் ஜோவிகாவை குறைந்த ஓட்டு வாங்குன போட்டியாளர் என வெளியே அனுப்பிட்டாங்க, ஜோவிகா ஏற்கனவே ஒரு முறை வெளியே சென்றிருக்க வேண்டிய நிலையில் எஸ்கேப் ஆகிவிட்டதாகவும் வீட்டுக்கு போய் தூங்குற வேலையை அவர் பார்க்கலாம் என்றும் ரசிகர்கள் கலாய்த்து வந்தனர். தனது மகள் பிக் பாஸ் வீட்டில் கடைசி வரை இருந்து தனக்கு கிடைக்காத டைட்டிலை தட்டித் தூக்குவார் என கனவு கண்டிருந்த வனிதா விஜயகுமாருக்கு பாதியிலேயே ஜோவிகா வெளியேறியது வருத்தத்தை கொடுத்துள்ளது.
பிக் பாஸை பேன் பண்ணுங்க: இந்நிலையில், திடீரென பிக் பாஸ் நிகழ்ச்சி ரொம்பவே மோசமாக செல்கிறது. அர்ச்சனா தனக்கு பயமாக இருக்கிறது வெளியே அனுப்புங்க என அழுது புலம்பி வருகிறார். நிக்சன் படுமோசமாக நடந்து கொள்கிறார். நல்லவேளை என் மகள் ஜோவிகா வெளியேறியதே நல்ல விஷயம் தான். இந்த நிகழ்ச்சியை உடனே தடை செய்யுங்க என வனிதா ட்வீட் போட்டிருந்தார். பிக் பாஸ் சீசன் 3, பிக் பாஸ் அல்டிமேட், பிக் பாஸ் ஜோடிகள், ஜோவிகாவை பிக் பாஸுக்கு அனுப்பியது என அனைத்து வேலைகளையும் செஞ்சுட்டு நீங்களா பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய சொல்றீங்க என வனிதாவை ரசிகர்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.
எக்ஸ் விட்டு போறேன்: ஆனால், உடனடியாக அந்த ட்வீட்டை டெலிட் செய்த வனிதா எக்ஸ் தளமும் பிக் பாஸ் வீடு போல வன்மம் நிறைந்ததாக மாறிவிட்டது. என் ட்வீட்களை டெலிட் செய்து விட்டேன். நான் எக்ஸ் தளத்தை விட்டே போறேன் என பதிவிட்டுள்ளார். ஏற்கனவே சில காலம் ட்விட்டரில் இருந்து விலகிய வனிதா ஜோவிகாவுக்காகவும் பிக் பாஸ் நிகழ்ச்சியை விமர்சனம் செய்யவும் ட்விட்டர் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
des: Vanitha Vijayakumar wants to ban Bigg Boss Tamil 7: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என வனிதா விஜயகுமார் ட்வீட் போட்டு டெலிட் செய்த நிலையில், எக்ஸ் தளத்தை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











