சைபர் புல்லிங்.. நான் ஏதாவது செய்துக்கொண்டால் நீங்கள் கொலையாளிகள் ஆகிவிடுவீர்கள்.. வனிதா வார்னிங்!

சென்னை: மன அழுத்தத்தில் தான் ஏதாவது செய்து கொண்டால் நீங்கள் எல்லாம் கொலையாளிகள் ஆகி விடுவீர்கள் என நடிகை வனிதா விஜயக்குமார் எச்சரித்துள்ளார்.

Recommended Video

Vanitha மகன் ஏன் பேசவில்லை • வனிதாவிடம் மன்னிப்பு கேட்ட பிரபலம்

நடிகை வனிதா விஜயக்குமார் கடந்த மாதம் பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.

வயதுக்கு வந்த மகள், 23 வயதில் மகன் உள்ள நிலையில் வனிதா மூன்றாவது திருமணம் செய்த சம்பவம் பெரும் விமர்சனத்துக்குள்ளானது.

முதல் மனைவி புகார்

முதல் மனைவி புகார்

போதாகுறைக்கு வனிதா மூன்றாவது திருமணம் செய்த பீட்டர் பாலின் மனைவி ஹெலன், வனிதா வீட்டிற்கு வேலைக்கு சென்ற என் கணவரை வனிதா மயக்கி திருமணம் செய்து கொண்டார் என குற்றம்சாட்டினார். தன்னை விவாகரத்து செய்யாமல் பீட்டர் பால் வனிதாவை திருமணம் செய்துக் கொண்டதாக சென்னை வடபழனி காவல்நிலையத்திலும் அவர் புகார் அளித்தார்.

விளாசிய வனிதா

விளாசிய வனிதா

இதனால் அடுத்தவர் கணவரை பறித்துக்கொண்டார் என சமூக வலைதளங்களில் சாடினர். தொடர்ந்து சமூக வலைதளங்களில் வனிதாவை நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர். ஏற்கனவே தனது மூன்றாவது திருமணம் குறித்த விமர்சித்த குட்டிபத்மினி, லக்ஷ்மி ராமகிருஷ்ணன், தயாரிப்பாளர் ரவீந்திரன் ஆகியோரை விளாசினார் வனிதா.

டார்கெட் செய்து..

டார்கெட் செய்து..

இந்நிலையில் தனது சமூக வலைதள பக்கங்களில் தன்னைப் பற்றி அவதூறாய் பேசுபவர்களை எச்சரிக்கும் வகையில் பதிவு ஒன்றை ஷேர் செய்திருக்கிறார் வனிதா. அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, உண்மையில் என்ன நடந்தது என்று தெரியாதவர்களுக்கும், என்னை டார்கெட் செய்து சந்தோஷப்படுபவர்களுக்கும்.

உயிரையே குடித்துவிடும்

உயிரையே குடித்துவிடும்

ஒருவரை பற்றி வல்கராகவும் புண்படுத்தும் வகையில் கமெண்ட் பதிவிடுவதும் சட்டத்திற்கு எதிரானது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். சைபர் புல்லிங் ஒரு ஜோக் அல்ல. அது சிலரின் உயிரையே குடித்து விடும். எனக்கு என்ன நடக்க வேண்டும் என நீங்கள் முயற்சிக்கிறீர்களோ, அதை நான் மன அழுத்தம் மற்றும் வெறுப்பால் செய்துகொள்வேன்.

கடவுள் பார்க்கிறார்..

கடவுள் பார்க்கிறார்..

அப்படி செய்தால் அது உங்கள் எல்லோரையும் கொலையாளிகள் ஆக்கிவிடும். மற்றவர்களுக்கு செய்யும் முன்பு யோசிங்கள். அது சரியானது அல்ல. நான் ஏதாவது குற்றம் செய்தால் சட்டம் என்னை விடாது. கடவுள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார் என நம்புகிறேன்.

நீங்கள் யார் என காட்டும்

நீங்கள் யார் என காட்டும்

நான் கடவுளுக்கும் என் மனசாட்சிக்கும் மட்டும்தான் பதில் சொல்ல வேண்டும். உங்களுக்கு உண்மை தெரியாது மக்களே. நீங்கள் என்னைப்பற்றி கெட்ட வார்த்தைகளால் எழுதுவது என்னை வெளிக்காட்டாது. ஆனால் நீங்கள் யார் என்பதை நிச்சயம் காட்டும்.. இவ்வாறு நடிகை வனிதா தனது பதிவில் கூறியிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X