பொன்னியின் செல்வன் படத்தை தாய்லாந்துக்கே சென்று பார்த்த வனிதா விஜயகுமார்.. டிரெண்டாகும் பிக்ஸ்!

சென்னை: நடிகையும் பிக் பாஸ் பிரபலமுமான வனிதா விஜயகுமார் தாய்லாந்தில் பொன்னியின் செல்வன் படம் பார்த்ததாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தாய்லாந்து நாட்டு தியேட்டரில் அவர் எடுத்துக் கொண்ட அழகான போட்டோக்களையும் ஷேர் செய்து ரசிகர்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

ஹாலிடேவுக்கு தாய்லாந்துக்கு சென்றுள்ள நிலையில், ஏகப்பட்ட வீடியோக்களையும் புகைப்படங்களையும் வனிதா விஜயகுமார் வெளியிடுவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

பிரபலங்கள் பாராட்டு

பிரபலங்கள் பாராட்டு

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி, சியான் விக்ரம், கார்த்தி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள பொன்னியின் செல்வன் படத்திற்கு ஏகப்பட்ட பிரபலங்கள் ஆதரவு தெரிவித்தும் பாராட்டியும் ட்வீட்களை போட்டுள்ளனர். இந்நிலையில், வனிதா விஜயகுமார் அந்த படத்தை பார்த்த போட்டோக்களை ஷேர் செய்துள்ளார்.

தாய்லாந்தில் வனிதா

தாய்லாந்தில் வனிதா

நடிகையும் பிக் பாஸ் பிரபலமுமான வனிதா விஜயகுமார் ஏகப்பட்ட நாடுகளுக்கு சுற்றுலா செய்து வருபவர். இந்நிலையில், தற்போது அவர் தாய்லாந்துக்கு விடுமுறையை கொண்டாட சென்றுள்ளார். இந்நிலையில், பொன்னியின் செல்வன் வெளியானதால் அங்கேயே படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்து விட வேண்டும் என நினைத்து பார்த்திருக்கிறார்.

விஐபி ஷோ

விஐபி ஷோ

நடிகை வனிதா விஜயகுமார் பொன்னியின் செல்வன் படத்தை தாய்லாந்தில் பார்த்த புகைப்படங்களையும் யூடியூப் வீடியோவையும் ஷேர் செய்துள்ளார். விஐபி ஷோவில் தான் தாய்லாந்தில் பொன்னியின் செல்வன் படத்தை பார்த்தேன் என்றும் பதிவிட்டுள்ளார். படம் உங்களுக்கு புடிச்சிருக்கா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தாய்லாந்தில் எடுக்கப்பட்ட பொன்னியின் செல்வன்

தாய்லாந்தில் எடுக்கப்பட்ட பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் படத்தில் இலங்கையில் எடுக்கப்பட்ட காட்சிகளாக வரும் காட்சிகள் எல்லாம் தாய்லாந்தில் படமாக்கப்பட்டுள்ளன. யானை மீது ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி சவாரி செய்யும் காட்சி, ஐஸ்வர்யா ராய் யானையில் வந்து பொன்னியின் செல்வனை காப்பாற்றும் காட்சி உள்ளிடவைகள் அங்கே தான் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

டிரெஸ் நல்லா இருக்கு

டிரெஸ் நல்லா இருக்கு

வெள்ளை நிறத்தில் டோட்டலாக கவர் பண்ண ஆடையை அணிந்து கொண்டு வனிதா விஜயகுமார் தாய்லாந்தில் பொன்னியின் செல்வன் படத்தை தியேட்டரில் பார்த்த நிலையில், அவர் வெளியிட்ட போட்டோக்களில் அவரது உடையை பார்த்த ரசிகர்கள் டிரெஸ் ரொம்ப நல்லா இருக்கு வனிதா என கமெண்ட் போட்டு வர்ணித்து வருகின்றனர்.

வனிதா விஜயகுமார் பர்த்டே

வனிதா விஜயகுமார் பர்த்டே

அக்டோபர் 5ம் தேதி தனது பிறந்தநாள் வருவதை முன்னிட்டுத் தான் நடிகை வனிதா விஜயகுமார் தாய்லாந்தில் முகாமிட்டுள்ளார். பிங்க் நிற டிசர்ட் உடையில் அவர் செம கூலாக பதிவிட்டுள்ள போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகின்றன. ரசிகர்கள் வனிதாவுக்கு அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X