விஜய்க்கு போட்டியாக வனிதா விஜயகுமார் செய்யப் போகும் தரமான சம்பவம்.. நாளைக்கு ஒரே ரொமான்ஸ்தான்!
சென்னை: குடியரசு தினத்துக்கு தளபதி விஜய் தான் 69வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை விடுவாரா? நாங்களும் தரமான சம்பவத்தை செய்வோம் என ராபர்ட் மாஸ்டருடன் இணைந்து நடித்துள்ள படத்தின் ஸ்நீக் பீக் காட்சியை நாளை வெளியிடப் போவதாக அட்டகாசமான போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார் வனிதா விஜயகுமார்.
ஜனவரி 26ம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படும் நிலையில், தளபதி ரசிகர்களுக்கு நாளை முழுவதும் தளபதி 69 டேவாகத்தான் இருக்கும். கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் நேற்றே தளபதி 69 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

விஜய்யுடன் சந்திரலேகா படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகை வனிதா விஜயகுமார் தற்போது அவருக்கு போட்டியாக தனது மிஸ்டர் அண்ட் மிஸ்ட்ரெஸ் படத்தின் ஸ்நீக் பீக் காட்சியை வெளியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
பிக் பாஸ் தந்த பிரபலம்: நடிகை வனிதா விஜயகுமார் குடும்பத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து வந்த நிலையில், கடைசியாக திருமணம் செய்துக் கொண்ட பீட்டர் பாலுடன் பிரச்சனை ஏற்பட்டு பிரிய அவரும் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துவிட்டார். தனது மகளை எப்படியாவது சினிமாவில் நடிகையாக்க வேண்டும் என போராடி வரும் வனிதா விஜயகுமார் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கிடைத்த பிரபலத்தை வைத்து தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிசியான நடிகையாக வலம் வருகிறார். வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகாவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
ராபர்ட் மாஸ்டருடன் ரொமான்ஸ்: நடிகை வனிதா விஜயகுமார் பிக் பாஸ் போட்டியாளராக பங்கேற்ற ராபர்ட் மாஸ்டருடன் இணைந்து மிஸ்டர் அண்ட் மிஸ்டர் படத்தில் நடித்த நிலையில், தொடர்ந்து அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் அப்டேட்களை வெளியிட்டு வருகிறார். இருவரும் தற்போது நிஜமாகவே காதலித்து வருகிறார்களா? அல்லது தொழில் ரீதியாக பணியாற்றி வருகிறார்களா என்கிற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
ராபர்ட் மாஸ்டர் பர்த்டே: ஜனவரி 26ம் தேதி வனிதா விஜயகுமார் மற்றும் ராபர்ட் மாஸ்டர் இணைந்து நடித்துள்ள மிஸ்டர் அண்ட் மிஸ்ட்ரெஸ் படத்தின் ஸ்நீக் பீக் காட்சி சரியாக 12.12 மணிக்கு வெளியாகும் என்கிற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். குடியரசு தினத்தை எல்லாம் குறிவைத்து வனிதா விஜயகுமார் இந்த அப்டேட்டை வெளியிடவில்லை என்றும் ஜனவரி 26ம் தேதி தான் ராபர்ட் மாஸ்டர் பிறந்தநாள் என்பதால் அவரது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக செம ரொமாண்டிக்காக இந்த அப்டேட்டை வனிதா விஜயகுமார் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











