யாருடன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறேன் தெரியுமா? வனிதா விஜயகுமார் பளீச்!

சென்னை : தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மஞ்சுளா ஆகியோரின் மகள் தான் வனிதா. இவர் விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். ஒரு சில படங்களில் நடித்து வந்த வனிதா, திருமணத்துக்கு பின் படங்களில் நடிப்பதிலிருந்து விலகினார். தற்போது படங்களில் பிஸியாக நடித்து வரும் வனிதா ரிலேஷன்ஷிப் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார்.

வனிதா விஜயகுமார் 2000ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை விவாகரத்து செய்தார். இதன்பின், 2007ம் ஆண்டு ஆனந்த் ஜெயராமனை திருமணம் செய்து கொண்ட வனிதா விஜயகுமார் கடந்த 2012 மன வருத்தம் காரணமாக அவரையும் பிரிந்தார். குடும்ப பிரச்சனை, மகன் பிரிவு, சொத்து தகராறு என ஏகப்பட்ட பிரச்சனைகளால் வனிதாவின் பெயர் டேமேஜ் ஆனது.

Vanitha Vijayakumar s candid answer on relationship with whom

வனிதா விஜயகுமார்: அதே நேரம் சின்ன கேப்புக்கு பின்பு விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் அதிரடியாக பேசி போட்டியாளர்களிடையே சண்டையிட்டார். இருப்பினும் பிக் பாஸ் நிகழ்ச்சி இவருக்கு நல்ல தொடக்கமாக அமைந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டிலை வென்றார். இதையடுத்து, பீட்டல் பாலுடன் பழக்கம் ஏற்பட்டதை அடுத்து அவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். இது இணையத்தில் மிகப்பெரிய சர்ச்சையானது.

ரசிகர்கள் கேள்வி: தற்போது படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர், அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அதில், ஒரு ரசிகர், ஃபெமினிசம் பற்றி உங்கள் கருத்து என்று கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த வனிதா, நான் ஃபெமினிஸ்ட் இல்லை, ஆனால், ஒரு ஆணுக்கு நேர்மையான பெண் தேவைப்படுகிறாள், இருந்தாலும் பெண் ஒரு ஆணை சார்ந்து தான் இருக்கிறாள் என்று பதில் அளித்தார்.

Vanitha Vijayakumar s candid answer on relationship with whom

யாருடன் ரிலேஷன்ஷிப்: இதையடுத்து மற்றொரு இணையவாசி, உங்களின் அடுத்த பிளான் என்ன என்ற கேள்விக்கு ஒரு சூப்பரான பிளான் இருக்கு, நான் மீண்டும் தயாரிப்பில் இறங்கி இருக்கிறேன் என்றார். மேலும், ஒருவர் நீங்க யாருடனாவது ரிலேஷன்ஷிப்பில் இருக்குறீங்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர். நாம் நான் உங்கள் அனைவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறேன் என்று சும்மா நச்சுனு பதில் அளித்தார். அவரின் இந்த பதிவு இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

விரைவில் ஹீரோயின்: வனிதாவின் மகளான ஜோவிகாவுக்கு படிப்பில் ஆர்வம் இல்லாததால், தன்னுடைய சிபாரிசு மூலம் அவரை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அனுப்பினார். பெரிதாக எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்கவில்லை என்றாலும்... யாருக்கும் மரியாதை கொடுக்காதவர் ஜோவிகா என சில அவப்பெயரோடு வெளியேறினார். இயக்குனர் பார்த்திபன் இயக்கி உள்ள டீன்ஸ் படத்தில் துணை இயக்குனராக பணியாற்றியுள்ள ஜோவிகா, விரைவில் ஹீரோயின் அவதாரம் எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X