Mrs & Mr : தியேட்டரில் ஓடல.. ஓடிடியும் வாங்கல.. வனிதா போட்ட மாஸ்டர் பிளான்!
சென்னை : நடிகை வனிதா விஜயகுமார் மிஸஸ் & மிஸ்டர் என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குநர் அவதாரம் எடுத்தார். இந்த திரைப்படத்தில் வனிதாவே கதாநாயகியாக நடித்தும் இருந்தார். இப்படம் கடந்த வெள்ளிக்கிழமை தியேட்டரில் வெளியான நிலையில், படத்தை நேரடியாக யூடியூபில் வெளியிட வனிதா, மாஸ்டர் பிளான் போட்டு இருக்கிறார்.
நடிகை வனிதா, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அடுத்தடுத்த படத்தில் நடித்து வந்த வனிதா தற்போது மிஸஸ் & மிஸ்டர் படத்தை இயக்கி உள்ளார். அந்த படத்தில், ராபர்ட் மாஸ்டர்,ஷகிலா, செஃப் தாமு, பாத்திமா பாபு, கிரண், ஸ்ரீமான், ஆர்த்தி, பவர் ஸ்டார் சீனிவாசன், கணேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். இப்படத்தை வனிதாவின் மகள் ஜோவிகா தயாரித்துள்ளார். இந்த படத்திற்காக கடந்த இரண்டு மாதமாக வனிதாவும், அவரது மகளும் பல சேனல்களுக்கு பேட்டி அளித்தனர்.

படத்தின் கதை: மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தில் வனிதா, ராபர் இருவரும் திருமணம் செய்து கொண்டு கணவன் மனைவியாக வாழ்த்து வருகிறார்கள். இதில், குழந்தை வேண்டாம் என்கிற முடிவில், ராபர்ட் மற்றும் வனிதா இருவரும் இருக்கின்றனர். இந்த நேரத்தில் வனிதாவின் தோழிகள், குழந்தை என்பது வாழ்க்கைக்கு தேவையான ஒன்று, குழந்தை தான் நாம் வாழ்ந்ததற்கான அடையாளம் என சொல்ல, வனிதாவிற்கு குழந்தை பெற்றும் கொள்ளும் ஆர்வம் வருகிறது. ஆனால், ராபர்ட்டுக்கு குழந்தை பெற்றுக்கொள்வதில் விருப்பம் இல்லாததால், 40 வயதிற்கு மேல் குழந்தை எதற்கு என கேட்கிறார். ஆனால், வனிதா தனது முடிவில் பிடிவாதமாக இருப்பதால், இருவருக்குள் சண்டை வந்து பிரிகிறார்கள். கடைசியில் வனிதாவின் ஆசைப்படி குழந்தை பிறந்ததா.. இல்லையா.. என்பது தான் கதை.
ஒரே கசமுசா: படத்தைப் பார்த்த பலர் படத்தை குடும்பத்தோடு பார்க்கவே முடியாது, படத்தில் பல இடத்தில் கசமுசா காட்சிகள் இருக்கிறது. கணவன் மனைவி கூட சேர்ந்து பார்க்க முடியாது என கருத்துக்களை பகிர்ந்து வந்தனர். படத்தை பற்றி வனிதா, பாக்யராஜ் படம் போல இருக்கும் என்று சொல்லி இருந்தார். ஆனால், படம் வெளியான முதல் நாளே படத்திற்கு பல நெகட்டிவ் விமர்சனங்கள் வந்ததால், இரண்டு நாளிலேயே தியேட்டர்கள் காத்து வாங்கியது. படம் தியேட்டரிலும் ஓடல, எந்த ஓடிடி நிறுவனமும் வாங்காததால், படத்தை வெளியிட வேறு ஒரு திட்டத்தை போட்டுள்ளார் வனிதா. அதாவது, தனக்கு சொந்தமான யூடியூப் சேனலில் படத்தை வெளியிட உள்ளார். இதற்கான அறிவிப்பை வனிதா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த படத்தை தனது யூடியூப் சேனலில் நம்பர்ஷிப்பாகி படத்தை பாருங்கள் கூறியுள்ளார்.
ஒரே வாரத்தில் யூடியூப்பில்: மிஸஸ் & மிஸ்டர் திரைப்படம் வரும் 18ந் தேதி காலை 10.30 மணிக்கு படத்தை வெளியிட உள்ளார். இத்திரைப்படம் தியேட்டரில் 11ந் தேதி வெளியான நிலையில், படம் வெளியான ஒரே வாரத்தில் வனிதா துணிந்து இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார். இந்த படம் தியேட்டருக்கு சென்று பார்க்கக்கூடிய அளவில் இல்லாததால், இப்படி ஒரு முடிவை வனிதா விஜயகுமார் எடுத்துஇருக்கிறார் போல.


Click it and Unblock the Notifications











