வனிதா விஜயகுமாரை மகனே வெறுத்துவிட்டாரா?.. அய்யய்யோ பிரபலம் என்ன இப்படி சொல்றாரே?

சென்னை: விஜயகுமாரின் மகளான வனிதா முதலில் நடிகையாக தனது சினிமா கரியரை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் குறைந்தன. ஆனால் சர்ச்சைகள் பெருகின. இப்போது Mrs&Mr என்ற படத்தை இயக்கினார். கடந்த 11ஆம் தேதி படம் ரிலீஸாகி; ரசிகர்களிடம் மோசமான விமர்சனத்தை பெற்றிருக்கிறது. அதுமட்டுமின்றி இளையராஜா வழக்கு தொடர்ந்த விஷயத்தில் வனிதா பேசியதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வனிதா விஜயகுமார் தமிழ்நாட்டில் பிரபலமானவர். 90களில் ஹீரோயினாக நடித்த அவர்; திடீரென சினிமாவிலிருந்து ஒதுங்கி ஆகாஷ் என்ற நடிகரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஸ்ரீஹரியும், ஜோவிகாவும் பிறந்தார்கள். திடீரன ஆகாஷுக்கும், வனிதாவுக்கும் திருமண வாழ்க்கையில் மனஸ்தாபம் ஏற்பட்டதால் அந்த மண வாழ்க்கை பாதியில் முடிந்தது. ஆகாஷை பிரிந்த வனிதா பிறகு இரண்டு திருமணங்கள் செய்து அதிலிருந்தும் வெளியே வந்தார்.

இரண்டாவது இன்னிங்ஸ்: திரைத்துறையிலிருந்து ஒட்டுமொத்தமாக விலகியிருந்த வனிதா; பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மீண்டும் லைம் லைட்டுக்கு வந்தார். தொடர்ந்து அந்தகன், அநீதி ஆகிய படங்களில் நடித்திருந்தார். இந்த இரண்டாவது இன்னிங்ஸில் நடிகையாக கலக்குவார் என்று எதிர்பார்த்த சூழலில்; திடீர் ட்விஸ்ட்டாக இயக்குநர் அவதாரம் எடுத்து ஆச்சரியப்படுத்தினார் அவர்.

Vanitha Vijayakumar s son Srihari has reportedly hated her
Photo Credit:

வனிதாவின் Mrs&Mr: அந்தவகையில் Mrs&Mr என்ற படத்தை இயக்கினார். இதில் அவருடன் ராபர்ட் மாஸ்டர், ஷகிலா, கிரண் என பலர் நடித்திருந்தார்கள். ஜோவிகா தயாரித்திருந்தார். படம் படுதோல்வியை சந்தித்தது. மேலும் ஓடிடி நிறுவனங்களும் இந்தப் படத்தை வாங்குவதற்கு பெரிய ஆர்வம் காண்பிக்கவில்லை என்றே தெரிகிறது. எனவே இப்படத்தை யூடியூபில் ரிலீஸ் செய்யும் திட்டத்திலும் அவர் இருக்கிறாராம்.

வழக்கு தொடர்ந்த இளையராஜா: இது ஒருபக்கம் இருக்க இப்படத்தில் சிவராத்திரி பாடலை பயன்படுத்தியதற்கு எதிராக இளையராஜா வழக்கு தொடர்ந்தார். அந்த சமயத்தில் வனிதா பேசிய பல விஷயங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. பலர் கார்த்திக் ராஜாவின் பெயரை இழுத்துவிட; அதனை திட்டவட்டமாக மறுத்தார் வனிதா. வழக்கை பொறுத்தவரை; 'தடை விதிக்க முடியாது. வேண்டுமென்றால் மனுதாரர் இழப்பீடு பெற்றுக்கொள்ளலாம்' என நீதிமன்றம் தெரிவித்துவிட்டது.

பயில்வான் பேட்டி: இந்நிலையில் வனிதா விஜயகுமார் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் ஒரு வீடியோவில், "வனிதா முதலில் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர் ஜெமினி கணேசன் போல் இருப்பார். அவர்களுக்கு பிறந்தவர்கள்தான் ஸ்ரீஹரியும், ஜோவிகாவும். அந்தத் திருமண முறிவுக்கு தனது தந்தை விஜயகுமார்தான் காரனம் என்று சொல்லி பெரிய குண்டை போட்டார் வனிதா. தொடர்ந்து செய்த திருமணங்களிலிருந்தும் வெளியே வந்துவிட்டார்.

மகன் வெறுத்துவிட்டார்: பிள்ளைகளை பொறுத்தவரை தாய் வனிதாவுடன் ஜோவிகா வந்துவிட்டார். ஸ்ரீஹரியோ தனது தந்தையுடன் இருக்கிறார். ஹரியிடம் சென்று வனிதா பற்றி கேட்டால் அவர் முகத்தை திருப்பிக்கொள்வார். பெற்ற மகனே வனிதாவை வெறுத்துவிட்டார்" என்றார். முன்னதாக ஸ்ரீ ஹரி ஒரு படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X