வனிதாவை சீண்டியது ரம்யா கிருஷ்ணனா? பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிருந்து வெளியேறுவதாக அறிவிப்பு!
சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் காளி வேஷம் போட்டு வனிதா விஜயகுமார் நடனமாடியது வேற லெவலில் வைரலானது.
அதன் பின்னர் தற்போது சுரேஷ் சக்கரவர்த்தி உடன் இணைந்து அழகிய தமிழ் மகள் பாடலுக்கு நடனமாடி இருந்தார் வனிதா விஜயகுமார்.

இனி வர மாட்டேன்
சர்ச்சைக்கு கொஞ்சமும் பஞ்சம் இல்லாத விஜய் டிவியின் அடுத்த சர்ச்சையாக நடிகை வனிதா விஜயகுமார் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இனி தான் கலந்து கொள்ள மாட்டேன் என அதிரடியாக அறிவித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

சீண்டிட்டாங்க
விஜய் டிவி எனக்கு பிக் பாஸ், குக் வித் கோமாளி, பிக் பாஸ் ஜோடிகள் என ஏகப்பட்ட வாய்ப்புகளை வழங்கி உள்ளது. அந்த நிறுவனத்தின் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை இருக்கிறது. ஆனால், என்னை வேலை செய்யும் இடத்தில் அவமானப்படுத்துவதை நான் இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பெண் ஒருவர்
வேலை இடத்தில் பெண்ணுக்கு எதிரி ஒரு சீனியர் பெண்ணாக இருப்பார் என எதிர்பார்க்கவில்லை என்றும், மூன்று குழந்தைகளை பெற்று தனிமையில் வாடும் ஒரு சிங்கிள் மதரை இப்படி அவமானப்படுத்தி இருக்கக் கூடாது என நடிகை வனிதா விஜயகுமார் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ரம்யா கிருஷ்ணனா
சீனியர் பெண் என வனிதா விஜய்குமார் குறிப்பிட்டுள்ள நிலையில், யார் அந்த பிரபலம் என்கிற கேள்வி எழுந்து வருகிறது. பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடுவராக நடிகை ரம்யா கிருஷ்ணன் கலந்து கொண்டு இருக்கும் நிலையில், அவருக்கும் வனிதா விஜயகுமாருக்கும் இடையே தான் மோதலா? என்கிற கேள்விகளும் எழுந்து வருகின்றன.

சாரி சுரேஷ்
தான் திடீரென வெளியேறி உள்ளதால் தனது பார்ட்னரான சுரேஷ் சக்கரவர்த்தியின் வாய்ப்பும் பறிபோகும் நிலை ஏற்பட்டதை எண்ணி ரொம்பவே வருத்தப்படுகிறேன். சாரி சுரேஷ் சக்கரவர்த்தி என்றும் மன்னிப்பு கேட்டுள்ளார் வனிதா விஜயகுமார். வனிதாவின் ட்வீட்டை பார்த்த சுரேஷ் சக்கரவர்த்தி மன்னிப்பு கேட்க அவசியமில்லை. உங்கள் எதிர்கால வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள் எனக் கூறியுள்ளார்.

அம்மாவுக்கு சமர்ப்பணம்
50 ஆண்டுகள் கழித்து நடிகை மஞ்சுளாவின் அழகிய தமிழ் மகள் இவள் பாடலுக்கு சுரேஷ் சக்கரவர்த்தி உடன் இணைந்து நடிகை வனிதா விஜயகுமார் நடனமாடிய ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டது. அதனை டேக் செய்து இப்படியொரு குண்டை வனிதா வீசியதில் இருந்தே ரசிகர்கள் பரப்பாகி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











