முறையாக விவாகரத்து அளிக்கவில்லை.. முதல் மனைவி புகார்.. வனிதாவின் மூன்றாவது கணவருக்கு சிக்கல்

சென்னை: முறையாக விவாகரத்து அளிக்கவில்லை என பீட்டர் பாலின் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

நடிகை வனிதா விஜயகுமார் மூன்றாவது முறையாக நேற்று, பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார்.

லிப் லாக் முத்தத்துடன் கிறிஸ்துவ முறைப்படி நடைபெற்ற திருமண போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

மூன்றாவது திருமணம்

மூன்றாவது திருமணம்

நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா விஜயகுமார், ஆகாஷ் என்பவரை 2000ம் ஆண்டு திருமணம் செய்து 2007ம் ஆண்டு விவாகரத்து செய்தார். உடனடியாக ஆனந்த் ஜெயராஜன் என்பவரை 2007ம் ஆண்டே திருமணம் செய்த வனிதா கடந்த 2012ம் ஆண்டு விவாகரத்து செய்தார். அதன் பின்னர் திருமணம் பற்றிய யோசனையே இல்லாமல் இருந்து வந்த வனிதா, தற்போது 8 ஆண்டுகள் கழித்து பீட்டர் பாலை நேற்று கரம் பிடித்தார்.

மகள்களே மணம்பெண் தோழிகளாக

மகள்களே மணம்பெண் தோழிகளாக

வனிதாவின் யூட்யூப் சேனல் தொடங்க உதவியாக இருந்த விஷுவல் எடிட்டர் பீட்டர் பாலை மகள்களின் சம்மதத்துடன் நடிகை வனிதா நேற்று, கோலாகலமாக திருமணம் செய்துக் கொண்டார். இந்த திருமணத்தில் முன்னாள் கணவர் ஆகாஷுக்கு பிறந்த ஜோவிதாவும், ஆனந்த் ஜெயராஜனுக்கு பிறந்த ஜெய்நிதாவும் மணப்பெண் தோழிகளாக இருந்து அம்மாவின் திருமணத்தை நடத்தி வைத்தனர்.

மாஸ்க் அணியாமல் முத்தம்

மாஸ்க் அணியாமல் முத்தம்

கொரோனா கலவரத்தில் உலகமே மாஸ்க் அணிந்து கொண்டு, முத்தம் கொடுக்க யோசித்து வரும் நிலையில், கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்துக் கொண்ட நடிகை வனிதா, லிப் லாக் முத்தத்துடன் தனது திருமணத்தை உற்சாகமாக கொண்டாடினார். ஆனால், அந்த திருமணத்தில் பலரும் மாஸ்க் அணியாமல் இருந்தது சமூக வலைதளத்தில் பேசு பொருளாக மாறி இருக்கிறது.

முதல் மனைவி புகார்

முதல் மனைவி புகார்

வனிதா மற்றும் பீட்டர் பாலுக்கு நேற்று திருமணம் ஆன நிலையில், தற்போது, பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன், சென்னை வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தன்னை முறையாக விவாகரத்து செய்யாமல் பீட்டர் பால், இரண்டாவதாக நடிகை வனிதாவை திருமணம் செய்துக் கொண்டுள்ளார் என புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

இப்போது ஏன்

இப்போது ஏன்

பீட்டர் பாலும் எலிசபெத் ஹெலனும் சுமார் 7 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். நடிகை வனிதா மூன்றாவது முறையாக பீட்டர் பாலை திருமணம் செய்துக் கொள்ளப் போவதை கடந்த ஒரு வாரத்திற்கும் முன்னதாக அறிவித்த நிலையில், தற்போது ஏன் ஹெலன் புகார் கொடுத்துள்ளார் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். எலிசபெத் ஹெலன் பீட்டர் பாலின் இரு குழந்தைகளை வளர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X