Vanitha: இது எங்க போய் முடியப்போகுதோ? பப்.. பார்ட்டி என வலம் வரும் வனிதா விஜயகுமார்!

சென்னை: தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான விஜயகுமாரின் மகளான வனிதா, தற்போது குடும்பத்தோடு சேர்ந்து இல்லாமல், தனிப்பெண்ணாக தனது மகளோடு வாழ்ந்து வருகிறார். தற்போது சினிமாவில் பிஸியாக இருக்கும் வனிதா பப்பில் ரசிகர்களுடன் எடுத்து கொண்ட போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

vanitha vijaykumar photo

நடிகை வனிதா, 1995ஆம் ஆண்டு சந்திரலேகா என்ற படத்தின் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். அதுதான் அவரின் முதல் படம் அந்த படத்தை தொடர்ந்து மாணிக்கம், தேவி என அடுத்தடுத்த படத்தில் நடித்து வந்தார். அதன் பிறகு படவாய்ப்புகள் இவருக்கு கிடைக்காமல் போனதால், நடிகர் ஆகாஷை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். இவர்களுக்கு ஸ்ரீஹரி என்ற மகன் பிறந்த நிலையில், அவரை பிரிந்து, ராஜன் ஆனந்தை திருமணம் செய்தார். பின் அவரையும் பிரிந்தார். வனிதாவுக்கு திருமண வாழ்க்கையும் சரியாக அமையாததால், தனது மகள்களுடன் தனிமையில் வசித்து வருகிறார்.

vanitha vijaykumar photo

அடுத்த திருமணமா:குடும்ப பிரச்சனை காரணமாக தனியாக இருந்த வனிதா, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.அதன் பிறகு தான் வனிதாவிற்கு சினிமாவில் நல்ல ஒரு இடம் கிடைத்தது. அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த வனிதா, மூன்றாவதாக பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்டார். எப்படி எப்போதுமே சர்ச்சையுடனே இருக்கும் வனிதா, கடற்கரை ஒன்றில் ராபர்ட் மாஸ்டரின் கையை காதலோடு பிடித்தபடி அமர்ந்திருக்கும் போட்டோவை வெளியிட்டார். அதைப்பார்த்த இணையமே, ஏற்கனவே காதலர்களாக இருந்த இவர்கள் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக செய்தி வெளியானது.

vanitha vijaykumar photo

என்ன இதெல்லாம்: ஆனால், வனிதா தான் புதிதாய் தயாரித்து இயக்கும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தின் ப்ரமோஷனக்காகத்தான் இவ்வாறு செய்திருக்கிறார் என்பது தெரியவந்தது. இந்த படத்தில் ஜோவிகா விஜயகுமார் தயாரிப்பாளராக களமிறங்க உள்ளார். இந்த படத்தை வனிதா தயாரித்தது மட்டுமில்லாமல் ஹீரோயினாகவும் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து மற்ற வேலைகள் நடந்து கொண்டு இருக்கிறது. படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், வனிதா, பப்பில் ரசிகர்களுடன் இருக்கும் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இது இணையத்தில் டிரெண்டாகி வரும் நிலையில், சில ரசிகர்கள் இது எங்கே போய் முடிய போகுதோ என கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

vanitha vijaykumar photo

More from Filmibeat

Read more about: vanitha vijaykumar photo
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X