வனிதா விஜய்குமாரின் புதிய ஸ்டூடியோ... யாரெல்லாம் கலந்துக்கிட்டாங்க பாருங்க!

சென்னை : நடிகை வனிதா விஜய்குமார் அடுத்தடுத்த விஷயங்களில் தன்னை பிசியாக வைத்துக் கொண்டு வருகிறார். பிக்பாஸ், குக் வித் கோமாளி என விஜய் டிவி நிகழ்ச்சியில் பிசியாக காணப்பட்ட இவர் தற்போது ஸ்டூடியோ ஒன்றை துவங்கியுள்ளார். இதில் அவரது நிகழ்ச்சிகளின் சக போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

நடிகை வனிதா விஜய்குமார்

நடிகை வனிதா விஜய்குமார்

நடிகை வனிதா விஜய்குமார் தன்னுடைய சினிமா கேரியரை மிகவும் சிறப்பான ஹீரோவுடன்தான் ஆரம்பித்தார். நடிகர் விஜய்யுடன் அவர் ஜோடி சேர்ந்து தனது முதல் படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து மாணிக்கம் உள்ளிட்ட வெற்றிப் படங்களில் இவர் நடித்துள்ளார்.

குழந்தைகளுடன் தனித்த வாழ்க்கை

குழந்தைகளுடன் தனித்த வாழ்க்கை

ஒரு கட்டத்தில் திருமணம் செய்து செட்டில் ஆனாலும் இவரது திருமண வாழ்க்கை நிலைக்கவில்லை. தொடர்ந்து அடுத்தடுத்த விஷயங்களில் தன்னை வெளிப்படுத்தி வருகிறார் வனிதா விஜய்குமார். தன்னுடைய குடும்பத்தினருடனும் இவருக்கு சிறப்பான தொடர்பு இல்லை. இதையடுத்து தன்னுடைய குழந்தைகளுடன் இவர் தனித்து வாழ்ந்து வருகிறார்.

ஏராளமான ரசிகர்கள்

ஏராளமான ரசிகர்கள்

இந்நிலையில் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் சக போட்டியாளர்களுடன் தொடர்ந்து வம்பு செய்து வந்தார். ஆயினும் இந்த நெகட்டிவ் செயல்பாடுகளே இவருக்கு தொடர்ந்து ரசிகர்களை பெற்றுத் தந்துள்ளது. இதையடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கேற்று டைட்டில் வின்னரானார்.

டைட்டில் வின்னர்

டைட்டில் வின்னர்

இவர் செய்த வித்தியாசமான டிஷ்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. கோமாளிகளை இவர் வாட்டி வதைத்தார். ஆயினும் சிறப்பான ஷோவை கொடுத்தார். இதையடுத்து பிக்பாஸ் அல்ட்டிமேட் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். ஆனால் தனக்கு செட் ஆகவில்லை என்று கூறி நிகழ்ச்சியிலிருந்து பாதியிலேயே வெளியேறினார்.

புதிய ஸ்டூடியோ

புதிய ஸ்டூடியோ

இதையடுத்து தனிப்பட்ட முறையிலும் பல செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறார். யூடியூப் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார். இந்நிலையில் பொட்டிக் ஒன்றை துவக்கி, போட்டோஷுட் நடத்த பிரத்யேக ஆடைகளை வழங்கி வருகிறார். இதனிடையே ஸ்டூடியோ ஒன்றை துவங்கியுள்ளார்.

பிக் பாஸ் பிரபலங்கள் நேரில் வாழ்த்து

பிக் பாஸ் பிரபலங்கள் நேரில் வாழ்த்து

இதில் சினிமா மற்றும் சின்னத்திரை நடிகர்கள் போட்டோஷுட் நடத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பேஷன் ஸ்டைலிங் உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் துவங்கப்பட்டுள்ள இந்த ஸ்டூடியோவிற்கு பிக் பாஸ் பிரபலங்கள் வருகை தந்துள்ளனர்

அடுத்தடுத்த செயல்பாடுகள்

அடுத்தடுத்த செயல்பாடுகள்

கவிஞர் சினேகன் மற்றும் அவரது மனைவி கன்னிகா, நடிகை ரேகா, தாடி பாலாஜி, காயத்ரி ரகுராம், உமா உள்ளிட்டவர்களும் இந்த துவக்க விழாவில் கலந்து கொண்டு நடிகை வனிதாவிற்கு வாழ்த்து தெரிவித்தனர். ஏற்கனவே துவங்கப்பட்டுள்ள பொட்டிக் சிறப்பாக செயல்பட்டுவரும் சூழலில் தற்போது இந்த ஸ்டூடியோவும் சிறப்பாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X