வனிதா நடித்த விவகாரமான படம்..மனைவியை பல ஆண்டாக தொடாத கணவர்..மல்லி பெல்லி விமர்சனம்!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகை வனிதா விஜயகுமார் அடுத்தடுத்து படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்தவகையில் கடந்த ஆண்டு வனிதாவின் நடிப்பில் வெளியானத் திரைப்படம் தான் மல்லி பெல்லி. இந்த படத்தில், நரேஷ், பவித்ரா லோகேஷ், ஜெயசுதா, சரத்பாபு. வனிதா விஜயகுமார், அனன்யா நாகெல்லா, ரோஷன், ரவிவர்மா ஆகியோர் நடித்திருந்தனர் இந்த படத்தின் விமர்சனத்தை இப்போது பார்க்கலாம்.
இயக்குனர் எம்.எஸ்.ராஜு இயக்கிய இந்த படத்தின் டிரைலர் வெளியான போதே பெரும் சலசலப்பு ஏற்பட்டது என்று சொல்லலாம். ஏன் என்றால் படத்தில் நடித்த நரேஷ் என்பவரும் பவித்ராவும் ஏற்கனவே ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக தெலுங்கு சினிமாவில் கிசுகிசு இருக்கும் நேரத்தில், இருவரும் திருமணம் செய்து கொள்வது போல டிரைலர் வெளியாகி பெரும் புயலை கிளப்பியது. இதையடுத்து இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிக அதிகமாகவே இருந்தது.

மல்லி பெல்லி படத்தின் கதை: இந்த படத்தில் கதாநாயகனாக வரும் நரேஷ், படத்தில் ஒரு பெரிய ஸ்டார் நடிகராகவே நடித்துள்ளார். இவருக்கு ஏற்கனவே இரண்டு திருமணம் நடந்து இரண்டு மனைவிகளும் இவருடன் வாழாமல் விவாகரத்து பெற்று சென்றுவிடுகின்றனர். இந்த நேரத்தில் தான் சௌமியா சேதுபதி அதாவது வனிதா விஜயகுமாரின் நட்பு கிடைக்கிறது. வனிதா நடிகர் நரேஷூடன் வயதில் குறைவாக இருந்தாலும், அவரிடம் இருக்கும் சொத்துக்காவும் பெயருக்காகவும் அவரை காதலிக்கிறார். இதையடுத்து, நரேஷை திருமணம் செய்து கொண்டு ஒரு மகனும் பிறக்கிறான்.

தனிமையில் ஹீரோ: நாட்கள் செல்ல செல்ல வனிதா, குழந்தையை விட்டு நைட் பார்ட்டி, துணை இயக்குநருடன் டேட்டிங் என ஊர் சுற்றி வருகிறார். இந்த விஷயம் தெரிந்த நரேஷ், குழந்தையை இப்படி விட்டுவிட்டு எங்கே போன என்று கேட்டு சண்டை போட, என்னை யாரும் கேள்வி கேட்கக்கூடாது, வேண்டும் என்றால் என் கூட வாழு இல்லை என்றால், விவாகரத்து செய்துவிடு போ என்று சொல்ல நரேஷ் அதிர்ச்சி அடைகிறான். இதனால் ஏற்பட்ட சண்டையில் வனிதா குழந்தையை அழைத்துக்கொண்டு அம்மா வீட்டுக்கு சென்று விடுகிறார். இதனால் நரேஷ் மிகுந்த மன அழுத்தத்தில் தனிமையில் வாழ்ந்து வருகிறார்.

புதிய காதல்: இந்த நேரத்தில் தான் புதிய படம் ஒன்றில் நரேஷ் கமிட்டாக, அந்த படத்தில் அவரின் மனைவியாக கன்னட நடிகை பார்வதி (பவித்ரா லோகேஷ்) நடிக்கிறார். நடிகை பவித்ரா படப்பிடிப்பில் யாரிடமும் பேசாமல் அமைதியாகவும், பணிவாகவும் இருப்பதை பார்த்து அவர் மீது ஒரு இனம்புரியாத உணர்வு வருகிறது நரேஷூக்கு. ஆனால், பவித்ரா கணவனுடன் வாழ்ந்து வருவதால், தனது காதலை மனதிற்குள் புதைத்துவிட்டு, பவித்ராவுடன் ஒரு நல்ல நண்பராக பழகுகிறார்.

சொத்துக்காக திருமணம்: இந்த நேரத்தில் தான், நடிகை பவித்ராவிடம் இருந்து நரேஷூக்கு உடனடியாக பார்க்க வேண்டும் என்று ஒரு மெசேஜ் வர இருவரும் தனியாக சந்தித்து பேசுகின்றனர். அப்போது தான் பவித்ரா, நான் சாதாரண குடும்பத்தில் பிறந்தேன், குடும்பத்தின் வறுமையாலத்தான் நடிக்க வந்தேன். பல படத்துல ஹீரோயினாக நடிச்சு இருக்கேன். அந்த படம் எல்லாம் வெற்றிப்படமாக இருந்தது. அப்போது, படப்பிடிப்பு ஒன்றில் அசிஸ்டன்ட் டைரக்டராக வந்த சங்கர் என்பவருடன் காதல் ஏற்பட்டது.
அவரையே திருமணமும் செய்து கொண்டேன். ஆனால், திருமணமான நாளில் இருந்து இப்போது வரைக்கும் என்னை அவர் தொட்டது கூட இல்லை. நான் அவரை விட சாதியில் தாழ்ந்தவள் என்பதால், அவர் என்னை தொடவிரும்பவில்லை. ஆனால், என் சொத்துக்காக என்னை திருமணம் செய்து கொண்டார். இந்த நரக வாழ்க்கையில் இருந்து எப்படி விடுவடுவது என்று கண்ணீர் விடுகிறார்.

பேரம் பேசிய வனிதா: பவித்ராவை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அனுப்பிவிட்டு, நேராக பவித்ரா வீட்டுக்கு வரும் நரேஷ், பவித்ராவின் கணவர் சங்கரிடம் பவித்ராவின் சொத்து மட்டும் உனக்கு வேணுமா இனிமேல் இவள் என் பவித்ரா என்று சொல்லி, இனிமேல் இந்த வீட்டில் உனக்கு இடம் இல்லை என்று சொல்லி சங்கரை வெளியே அனுப்பி விடுகிறார். இதையடுத்து, இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த விஷயம் வனிதாவிற்கு தெரியவர, வீட்டுக்கு வரும் வனிதா, எனக்கு 100 கோடி வேணும், அதைகொடுத்துவிட்டு நீ யார வேண்டுமானாலும் கல்யாணம் செய்துக்கோ என்று பேரம் பேச, நரேஷ் உனக்கு ஒரு பத்துபைசாக்கூட தரமாட்டடேன், நீ அந்த டைக்டர் கூட சுத்துவது எனக்கு தெரியாதா என்று சொல்ல இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்படுகிறது.
மீடியாவை கூட்டி விவாதம்: இதையடுத்து, வனிதா நரேஷ் தனக்கு துரோகம் செய்துவிட்டு, பவித்ராவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார் என்று மீடியாக்கள் முன் சொல்லி இருவரின் மானத்தை வாங்கிவிடுகிறாள். பிரச்சனை பெரிதானதால், நரேஷ் மற்றும் பவித்ரா வீட்டில் இருந்து வெளியேறி ஒரு ஓட்டலில் தங்குகின்றனர். இதை தெரிந்து கொண்ட வனிதா, ஒட்டுமொத்த மீடியாவையும் ஓட்டலுக்கு வரவைத்து, தாலி கட்டுன மனைவி இருக்கும் போது நடிகையுடன் ஓட்டலில் இருக்கிறார் என்று கத்தி கூப்பாடு போடுகிறார்.
வெளியே வந்தால் மொத்த மானமும் போய்விடும் என்று பவித்ரா அழ, நீ என் அழ வேண்டும், நாம சேர்ந்து வாழ்வதை யாராலும் தடுக்க முடியாது என்று பவித்ராவின் தோளில் கையை போட்டபடி கெத்தா வெளியே வருகிறார். இதோடு இந்த படம் முடிகிறது. இது நரேஷ் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம் என்று சொல்லப்படுகிறது. தெலுங்கு திரைப்படமான இப்படத்தை அமேசான் ஓடிடியில் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











