போச்சுடா...இது வேறயா...அப்பாவை வம்புக்கு இழுக்கும் வனிதா...கலாய்க்கும் நெட்டிசன்கள்

சென்னை : மறைந்த நடிகை மஞ்சுளா - நடிகர் விஜயக்குமாரின் மூத்த மகளான வனிதா, விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் ஹீரோயினாக நடிக்க வந்தார். தொடர்ந்து மாணிக்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

திருமணத்திற்கு பிறகு சிறிது காலம் நடிக்காமல் இருந்த வனிதா விஜயக்குமாரின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது. பிறகு படங்கள், டிவி சீரியல்கள் என நடித்து வந்தாலும், மற்றொரு புறம் தனிப்பட்ட வாழ்க்கையில் அடுத்தடுத்து திருமணம், விவகாரம், பிரச்சனைகளையும் சந்தித்தார்.

விவாத பொருளான வனிதா

விவாத பொருளான வனிதா

இரண்டாவது திருமணமும் விவாகரத்தில் முடிந்தது. அதன் பிறகு விஜய் டிவி.,யில் பிக்பாஸ் சீசன் 3 ல் போட்டியாளராக கலந்து கொண்டார். அதற்கு பிறகு பிரபலமும் ஆனார். அவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய செய்திகளும் மீடியாக்களில் உலவ துவங்கியது.

3 வது திருமணமும் தோல்வி

3 வது திருமணமும் தோல்வி

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு, குக் வித் கோமாளி சீசன் ஒன்றில் பங்கேற்று, வெற்றியும் பெற்றார். தொடர்ந்து மூன்றாவதாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார் 3 குழந்தைகளுக்கு தாயான வனிதா. அந்த திருமணமும் 4 மாதங்களில் முடிவுக்கு வந்தது.

40 திருமணம் கூட பண்ணுவேன்

40 திருமணம் கூட பண்ணுவேன்

இந்நிலையில் தற்போது சினிமா வாய்ப்புக்கள் அதிகம் வர துவங்கி உள்ளன. இதில் பிக்அப் டிராப் படத்திற்காக நடந்த ஃபோட்டோஷுட் ஃபோட்டோக்களில் பவர்ஸ்டார் சீனிவாசனுடன் தாலி கட்டி, மாலை மாற்றுவது போன்று இருந்ததால் அவை வைரலாகின. நான்காவது திருமணமா என கேட்டதற்கும், 4 என்ன 40 திருமணம் கூட பண்ணுவேன் என பதிலளித்து பரபரப்பை கிளப்பினார்.

அப்பாவை வம்புக்கு இழுத்த வனிதா

அப்பாவை வம்புக்கு இழுத்த வனிதா

பவர்ஸ்டாருடன் முத்தம், நெருக்கமாக இருப்பது என பிரச்சனை நீண்டு கொண்டே போகிறது. இந்த பிரச்சனை ஓய்வதற்குள் அடுத்த பிரச்சனையை கிளப்பி உள்ளார் வனிதா. டிவி.,யில் பணக்காரன் படத்தில் விஜயக்குமார் இருக்கும் காட்சி இருக்க, அதற்கு முன் நிற்பது போன்ற ஃபோட்டோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் வனிதா.

அப்பாவை போல் மகளா

அப்பாவை போல் மகளா

இதில் என்ன பிரச்சனை என்கிறீர்களா...இந்த ஃபோட்டோவுடன், அப்பாவை போல் மகள்...டிஎன்ஏ என கேப்ஷன் பதிவிட்டுள்ளார். வனிதாவின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகளால் விஜயக்குமார் குடும்பத்தில் யாரும் வனிதாவுடன் பேசுவதில்லை என கூறப்படுகிறது.

என்ன தான் சொல்ல வர்றார்

என்ன தான் சொல்ல வர்றார்

இந்த சமயத்தில் விஜயக்குமாரை வைத்து, அதுவும் டிஎன்ஏ என வேறும் குறிப்பிட்டுள்ளதால் அவர் எதைச் சொல்கிறார் என்ற குழப்பம் வேறு வந்துள்ளது. இதை வைத்து வனிதாவை கண்டபடி கலாய்த்து, கழுவி ஊற்றி வருகின்றனர் நெட்டிசன்கள்.

கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

நீங்களாச்சும் டிஎன்ஏ டெஸ்ட் எடுங்க. பாரதி கண்ணம்மாவையும் எடுக்க சொல்லுங்க என்றும், அதே டிஎன்ஏ தான் உங்க அப்பா செருப்பால அடிச்சது ஞாபகம் இருக்கா என்றும், இந்த விஷயம் உங்க அப்பாவுக்கு தெரியுமா, இதுல அவர ஏன் இழுக்குறீங்க என்றும் கண்டபடி கழுவி ஊற்றி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X