டேய்.. என்னையா கலாய்க்கிற.. உன்ன பார்த்துக்குறேன்டா.. கவினுக்கு வார்னிங் கொடுத்த வனிதா!
Recommended Video
சென்னை: வீ ஆர் த பாய்சு நிகழ்ச்சியில் தன்னை மரண கலாய் கலாய்த்த கவினை நடிகை வனிதா எச்சரித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களிலேயே மிகவும் அடாவடியாக நடந்து கொண்டவர் வனிதாதான். யாருக்கும் அடுத்தவர் விஷயத்தில் கருத்து சொல்ல உரிமையில்லை என்று கூறிய வனிதா, தான் மட்டும் மற்றவர்கள் விஷயத்தில் ஒபினியன் கூறி வந்தார்.
மேலும் மற்றவர்கள் சொல்வதை கேட்காமல் பிடிக்காதவர்களுக்கு எதிராக கேங் ஃபார்ம் செய்துகொண்டு பல போட்டியாளர்களையும் பாடாய் படுத்தி வந்தார். அதோடு கொளுத்திப்போட்டு சண்டை மூட்டி விடுவதையும் ஹாபியாக செய்து வந்தார் வனிதா.

ஒதுங்கிய ஹவுஸ்மேட்ஸ்
தன்னை எதிர்த்து கேள்வி கேட்டவர்களையும் உண்டு இல்லை என செய்து வந்தார் வனிதா. இதனால் அவரை எதிர்த்து கேள்வி கேட்கவோ எதிர்த்து பேசவோ அச்சப்பட்ட ஹவுஸ்மேட்ஸ், நமக்கு எதற்கு வம்பு என ஒதுங்கியிருந்தனர்.

வச்சு செய்த கவின்
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி முடிந்த நிலையில் வீ ஆர் தி பாய்சு என பாய்ஸ் கேங்கை வைத்து ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது விஜய் டிவி. நேற்று ஒளிபரப்பான இந்நிகழ்ச்சியில் கவின் வனிதாவை போலவே பேசி திக்குமுக்காடச் செய்தார்.

ஆனாலும் போர்
பிக்பாஸ் வீட்டில் வனிதா கொளுத்தி போட்டதையெல்லாம் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல நினைத்ததையெல்லாம் பேசிவிட்டார் கவின். ஒரு கட்டம் வரை ரசிக்கும்படியாக இருந்த இந்நிகழ்ச்சி பின்னர் போர் அடிக்க தொடங்கிவிட்டது.
உன்னை பாத்துக்குறேன்டா
இந்நிலையில் தன்னை வச்சு செய்த கவினை நடிகை வனிதா எச்சரித்திருக்கிறார். இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள வனிதா, டேய் கவின் தம்பி கொண்டாட்டம்ல பாத்துக்குறேன் உன்னை என்று கூறி இமோஜி ஒன்றை பதிவிட்டிருக்கிறார்.
மன்னிச்சு விட்றுங்க
வனிதா இந்த எச்சரிக்கையை ஜாலி மூடில் தான் தெரிவித்திருக்கிறார். இதனை பார்த்த கவின் ஃபேன்ஸ், அக்கா நம்ம பையன்தான் மன்னிச்சு விட்றுங்க என கெஞ்சியிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











