“விஜய்யின் தல தீபாவளி ரிலீஸ் என்னோட தான்”.. அழகிய நினைவுகளை பகிர்ந்து கொண்ட வனிதா!
எப்போதும் தான் விஜய்யின் ஹீரோயின் தான் என நடிகை வனிதா தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: பிகில் திரைப்படம் வெற்றிப்பெற நடிகை வனிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜயகுமார் - மஞ்சுளா தம்பதியின் மூத்த மகளான வனிதா, 1995ம் ஆண்டு வெளிவந்த சந்திரலேகா படத்தில் விஜய்க்கு ஜோடியாக அறிமுகமானவர். இவர் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் மீண்டும் லைம் லைட்டுக்கு வந்துள்ளார். தற்போது அவர் சன்டிவியில் ஒளிபரப்பாகும் சந்திரலேகா சீரியலில் நடிக்கிறார்.

இந்நிலையில், பிகில் பட ரிலீசையொட்டி நடிகை வனிதா விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், "24 ஆண்டுகளுக்கு முன்பு விஜய்யின் முதல் தீபாவளி ரிலீஸ் என்னுடன் நடித்த சந்திரலேகா தான். நாங்கள் இருவரும் பின்நோக்கி போய் எங்களுடைய அழகான நினைவுகளை பகிர்ந்து கொள்கிறோம். விஜய்யின் ஹீரோயின் நான் என்பதில் எனக்கு பெருமை", என குறிப்பிட்டுள்ளார்.
வனிதாவின் இந்த பதிவை பார்த்து சிலர் கிண்டல் செய்தனர். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், "வனிதா மீது ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம்.. அது அவரது சொந்த பிரச்சினை, ஆனால் அவர் இங்கு தளபதியுடனான அருமையான நினைவை பகிர்ந்துள்ளார்.. அது அவரது உரிமை, பிடிக்காதவர்கள் பின்தொடர வேண்டாம். ஏனெனில் இங்கே கருத்து பதிவிடும் பலர் "சந்திரலேகா" வெளியீட்டின்போது பிறந்திருக்கவே மாட்டீர்கள்", என ஒரு பெண் பதிவிட்டுள்ளார்.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படம் நேற்று வெளியானது. விஜய் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகிறார்கள். பல்வேறு தரப்பினரும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











