திரைத் துளி
சென்னை:
நடிகர் விஜயகுமாரின் மகள், நடிகை வனிதாவின் திருமணம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.
தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடித்தவர் வனிதா. நடிகர் விஜயகுமார், நடிகை மஞ்சுளாவின் மகள் ஆவார். சினிமாவுக்குப் பிறகு வனிதா சில டி.விதொடர்களிலும் நடித்து வந்தார்.
ஒரு டி.வி. தொடரில், வனிதாவுடன், ஆனந்த் என்பவரும் நடித்து வந்தார். இந்த நேரத்தில் இருவருக்கும் காதல் மலர்ந்தது. பெற்றோர்களும் காதலுக்குபச்சைக்கொடி காட்டி விட்டனர்.
வனிதா தற்பொழுது தமிழில் தொடங்கவிருக்கும் ஏஷியா நெட் தொலைக்காட்சியில் தயாரிப்பாளர் மற்றும் பொறுப்பாளராக பணியாற்றுகிறார்.
ஆனந்த் மெக்கானிக்கல் என்ஜினியரிங் படித்தவர். இவர்களது திருமணம் சென்னை ஆலப்பாக்கத்தில் உள்ள அவர்களது வெங்கரேஷ்வரா பங்களாவில்ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. திருமணம் முடிந்ததும், தம்பதிகள் மாலத்தீவு செல்கின்றனர்.


Click it and Unblock the Notifications











