மகளை வைத்து பக்கா ஸ்கெட்ச் போட்ட வனிதா விஜயகுமார்?.. ஜோவிகாவின் புதிய ரோல் இதுவா?

சென்னை: நடிகை வனிதா சில படங்களில் நடித்திருக்கிறார். இதனையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஃபேமஸ் ஆனார். அதனையடுத்து அவர் பிக்பாஸ் வனிதா என்றே அழைக்கப்படுகிறார். அவரது மகள் ஜோவிகா பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் கலந்துகொண்டார். சூழல் இப்படி இருக்க ரபார்ட் மாஸ்டரும், வனிதாவும் இணைந்திருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி அவர்களுக்கு திருமணமா என்ற சந்தேகத்தை ரசிகர்களிடையே ஏற்படுத்தியிருந்தது. ஆனால் அது திருமணம் இல்லை Mr & Mrs படத்தின் ப்ரோமோஷன் என்பது தெரியவந்தது.

விஜயகுமாரின் மகளான வனிதா கோலிவுட்டில் சில படங்களில் கதாநாயகியாக நடித்தவர். விஜய்யுடன் சந்திரலேகா படத்திலும் நடித்தார். அதன் பிறகு சினிமாவிலிருந்து ஒதுங்கிய அவர் பிக்பாஸில் கலந்துகொண்டார். பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தால் கண்டிப்பாக தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து வீடுகளிலும் பிரபல்யம் ஆகிவிடலாம் என்ற விதியின்படி வனிதாவும் தமிழ்நாடு முழுக்க மேலும் ஃபேமஸ் ஆனார். பிக்பாஸ் டைட்டிலை அவர் வெல்லாவிட்டாலும் போட்டியிலிருந்து வெளியேறிய பிறகு படவாய்ப்புகள் குவிந்துவருகின்றன. இதுவரை 17 படங்களில் நடித்திருப்பதாக கூறுகிறார் வனிதா.

vanitha jovika robert

அந்தகன்: பிக்பாஸுக்கு சென்று வந்த பிறகு அவர் வசந்தபாலனின் அநீதி படத்தில் நடித்தார். அந்தப் படம் ஓரளவு வரவேற்பை பெற்றது. அதனையடுத்து பிரசாந்த் ஹீரோவாக ரீ எண்ட்ரி கொடுத்த அந்தகன் படத்தில் முக்கியமான ரோலை ஏற்றிருந்தார் வனிதா விஜயகுமார். மேலும் அவரது நடிப்பில் சில படங்கள் அடுத்தடுத்து வெளியாகவிருக்கின்றன. இதற்கிடையே அவரது மகள் ஜோவிகாவும் திரைத்துறையில் தனக்கான இடத்தை பிடிப்பதற்கு கடுமையாக உழைத்துவருகிறார்.

வனிதாவின் பேச்சு: வனிதா விஜயகுமாரை பொறுத்தவரை தனது மனதில் பட்டதை யாருக்கும் அஞ்சாமல் பேசக்கூடியவர். ஒரு பேட்டியின்போது லட்சுமி ராமகிருஷ்ணனை வறுத்தெடுத்துவிட்டார். அதேபோல் தனது சகோதரர் அருண் விஜய் குறித்து தனது குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் குறித்து வெளிப்படையாக பேட்டிகளில் பேசிவருகிறார். அதேசமயம் அவர் அப்படி பேசுவதுதான் அவரை அவரது குடும்பத்தினர் தள்ளி வைத்ததற்கான காரணம் என்றும் ஒரு தகவல் பரவிக்கொண்டிருந்தது குறிப்பிடஹ்த்டக்கது.

வனிதாவின் திருமணம்: இது ஒருபக்கம் இருக்க; வனிதா விஜயகுமாரின் திருமண விவகாரம் சர்ச்சைகளை சம்பாதித்தது குறிப்பிடத்தக்கது. முதலில் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டு பிறகு விவாகரத்து பெற்றார். அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தார். அதன் பிறகு ராஜன் என்பவரை திருமணம் செய்தார். அதுவும் விவாகரத்தில் முடிந்தது. பிறகு நடன இயக்குநர் ராபர்ட்டுடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. கடைசியாக அவர் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அந்தத் திருமண வாழ்க்கையும் சரியாக இல்லாததால் அதிலிருந்து வெளியே வந்தார்.

தயாரிப்பாளர் ஜோவிகா: இதற்கிடையே வனிதாவின் மகள் ஜோவிகாவும் பிக்பாஸில் கலந்துகொண்டார். ஆனால் டைட்டில் வெல்ல முடியவில்லை. சூழல் இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்பு ராபர்ட்டும், வனிதாவும் இருக்கும்படி திருமண அழைப்பிதழ் ஃபார்மெட்டில் ஒரு புகைப்படம் வெளியானது. அதனையடுத்து அவர்களுக்கு திருமணம் என்று பேச்சுக்கள் எழுந்தன. ஆனால் அது திருமணம் இல்லை படத்தின் ப்ரோமோஷன் என்று வீடியோ வெளியிட்டு விளக்கமளித்திருக்கிறார் வனிதா.

இந்நிலையில் Mr & Mrs படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி இந்தப் படத்தின் தயாரிப்பாளராக ஜோவிகா பணியாற்றுவதாக சொல்லப்படுகிறது. இப்போது தயாரிப்பாளராக சினிமாவுக்குள் நுழைத்து பின்நாட்களில் ஹீரோயினோ அல்லது இயக்குநராகவோ ஆக்கலாம் என்று வனிதா ஸ்கெட்ச் போட்டிருப்பதாக தகவல்கள் வட்டமடித்துக்கொண்டிருக்கின்றன.முன்னதாக வனிதா - ஆகாஷ் தம்பதிக்கு பிறந்த மகன் பிரபு சாலமான் படத்தில் ஹீரோவாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X