கணவர் பீட்டர் பாலை கதற கதற நடுரோட்டில் ஓடவிட்ட வனிதா விஜயகுமார்.. கசிந்தது தகவல்!

சென்னை : ஓரிரு மாதங்களுக்கு முன்பு வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்த நிலையில் அந்த செய்தி சமூக ஊடகங்களில் மிகப்பெரிய பேசுபொருளாக உருவானது.

வனிதா விஜயகுமார் தனது சொந்த வாழ்வில் எடுத்த இந்த முடிவில் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, நாஞ்சில் விஜயன் என பலரும் மூக்கை நுழைக்க அனைவருக்கும் அசராமல் பதில் கொடுத்தார் வனிதா.

இந்நிலையில் தொடர்ந்து பீட்டர் பாலுடன் எடுத்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்த வனிதா, திருமணமான ஓரிரு மாதங்களிலேயே பீட்டர் பாலுடனான திருமண வாழ்க்கை முடிவுக்கு வரும் அளவுக்கு சென்றுள்ளதாக சில நம்பத்தகுந்த வட்டாரங்களின் மூலம் செய்திகள் கசிந்துள்ளது.

சர்ச்சைகளையும் ஏற்படுத்தி

சர்ச்சைகளையும் ஏற்படுத்தி

சமீப காலமாகவே சமூக வலைதளங்களில் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டுக் கொண்டிருந்த வனிதா விஜயகுமார் பீட்டர் பால் திருமணம் விவகாரம் அனைவராலும் அலசப்பட்டு வந்த நிலையில், அவை பல்வேறு சர்ச்சைகளையும் ஏற்படுத்தி மிகப்பெரிய அளவில் ட்ரெண்டிங் ஆனது.

வாக்குவாதத்தில் ஈடுபட்டு

வாக்குவாதத்தில் ஈடுபட்டு

பீட்டர் பாலுடனான இந்த திருமணத்தை பற்றி பேசிய லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, நாஞ்சில் விஜயன் உள்ளிட்டோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவை சமூக வலைத்தளங்களில் பரவலாக பரப்பப்பட்டு வைரலானது. ஒரு பக்கம் இணையத்தளம் அனைத்தும் வேறு வழி இல்லாமல் அனைவரும் இதை பற்றியே பார்த்து தீர வேண்டும் என்ற கட்டாயத்துக்கு ஆள் ஆகினர் .

பிரச்சினையெல்லாம் முடிவுக்கு

பிரச்சினையெல்லாம் முடிவுக்கு

ஒரு வழியாக இந்த பிரச்சினையெல்லாம் முடிவுக்கு வர பீட்டர் பால் வனிதா தம்பதியினர் குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வனிதா தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வந்தார்.

இருவருக்கும் வாய் தகராறு

இருவருக்கும் வாய் தகராறு

தொடர்ந்து வெளியூர்களுக்கும் சுற்றுலாதளங்களுக்கும் ஜோடியாக சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்த வனிதா மற்றும் பீட்டர் பால் ஓரிரு நாட்களுக்கு முன்பு கோவாவிற்கு சுற்றுலா சென்று வந்த நிலையில் அங்கு இருவருக்கும் ஏற்பட்ட வாய் தகராறு இப்பொழுது முற்றிப்போய் வாய்க்கால் தகராறு ஆகியுள்ளது என சொல்லப்படுகிறது.

வெளுத்து விட்டார்

வெளுத்து விட்டார்

இந்த நிலையில் குடிபோதையில் கோவாவில் இருந்து திரும்பும் வழியில் வனிதாவிடம் பீட்டர் பால் தகராறில் ஈடுபட, ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த வனிதா பீட்டர் பாலை வெளுவெளு என வெளுத்து விட்டார் எனத் தெரிகிறது.

நண்பர்களின் வீட்டிற்கு

நண்பர்களின் வீட்டிற்கு

இதனால் கோபமடைந்த பீட்டர் பால் வீட்டிற்கு வராமல் நண்பர்களின் வீட்டிற்குச் சென்று தங்கி இருந்ததாக சொல்லப்பட்ட நிலையில், அங்கும் வனிதா சென்று அடி வெளுத்து விட்டாராம். பீட்டர் கையில் குவாட்டர் , நோ அதர் மேட்டர் என்று தாடியுடன் சுற்றி திரிகிறாராம் .

குடித்துவிட்டு ஆபீஸிலேயே

குடித்துவிட்டு ஆபீஸிலேயே

இதனால் செய்வதறியாது திகைத்து கொண்டிந்த பீட்டர் பால் இப்போது ஆபீஸே கதி என வீட்டுக்கு கூட செல்லாமல், அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு ஆபீஸிலேயே படுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதுவும் தனது பழைய ஆபீஸ் என்பதனால் பழைய தயாரிப்பாளர் மிகவும் கடுமையாக பேசி உள்ளே அனுமதிக்க வில்லை என்றும் சொல்ல படுகிறது. ஆதலால் பார்க்கிங் ஏரியாவில் படுத்து உருண்டு கொண்டி இருப்பதாகவும் பலரும் சொல்லுகின்றனர்

தனி ராத்திரி

தனி ராத்திரி

இந்த நவராத்திரி திருவிழா ஊர் முழுவதும் கொண்டாட்ட பட்டு வருகிறது. லாக் டவுன் இப்பொழுது தான் கொஞ்சம் கொஞ்சமாக ஒருஅழவுக்கு முடிவுக்கு வருகிறது என்று மக்கள் நம்புகின்றனர் . இதற்கு நடுவில் இந்த பீட்டர் பால் வனிதா இருவரும் அடித்த லூட்டி கடுவுளுக்கே பொறுக்கவில்லை என்று சொல்லி பலரும் கமெண்ட் கொடுத்த வண்ணம் உள்ளனர் . இந்த நவராத்திரி முதல் மீண்டும் இவர்கள் வாழ்க்கை தனிராத்திரி தான் என்ற கிண்டலும் நெட்டிஸின்ஸ் சொல்ல துவங்கினர் .

மேலும் இந்த செய்தி இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகாத நிலையில் சில நம்பத்தகுந்த வட்டாரங்களின் மூலம் இந்த செய்தி கசிந்துள்ளது. இதனை தொடந்து தயாரிப்பாளர் ரவீந்திரன் தனது இணையதள பக்கத்தில் இது அனைத்தும் உண்மை தான் என்று ஒரு அப்டேட் போட்டு உள்ளார்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X