விஜய் சேதுபதி, கிருஷ்ணாவின் புதிய 'வன்மம்'- காரணம் சுனைனா?!

சென்னை: தமிழ் சினிமாவில் இரண்டு கதாநாயகர்கள் இணைந்து நடிக்கும் படங்கள் ஒன்றும் புதிதல்ல.

முன்னணி நட்சத்திரங்களான ரஜினி-கமல், அஜித்-விஜய் ஆகியோரோ அப்படிப்பட்ட படங்களில் நடித்திருக்கின்றார்கள்.

அந்த வகையில் பீட்ஸா புகழ் விஜய் சேதுபதியும், யாமிருக்க பயமே புகழ் கிருஷ்ணா குலசேகரனும் இணைந்து நடிக்கும் படம்தான் "வன்மம்".

ஜெய் கிருஷ்ணா இயக்கும் படம்:

ஜெய் கிருஷ்ணா இயக்கத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் இப்படத்தில் கிருஷ்ணாவிற்கு ஜோடியாக சுனைனா நடித்துள்ளார்.

25 வருடத் தவம்:

சுமார் 25 வருடங்களாக தமிழ் சினிமாவில் துணை இயக்குனராகவும், இணை இயக்குனராகவும் பணியாற்றியவர் ஜெய் கிருஷ்ணா.

60 நாட்கள் படபிடிப்பு:

இப்படத்தின் கதையைக் கேட்டதுமே தயாரிப்பாளர் நேமிசந்த் ஐபக்கும், விஜய் சேதுபதியும் பிளாட் ஆகிவிட்டனராம். கிட்டதட்ட 60 நாட்களுக்கு மேலாக நாகர்கோவில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் படபிடிப்பை நடத்தி உள்ளனர் படக்குழுவினர்.

Vanmam movie releases on September 26th…

பிஸியாகப் போகும் விஜய் சேதுபதி:

இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் சுனைனாவும், கிருஷ்ணாவும் மிகவும் நெருக்கமாக நடித்துள்ளனராம். ஏற்கனவே படு பிஸியாக உள்ள விஜய் சேதுபதி இந்தப் படம் வந்தால் இன்னும் பிஸியாகி விடுவார் என்கின்றார்கள் படக்குழுவினர்கள்.

26 ஆம் தேதி ரிலீஸ்:

இந்த மாதம் 26 ஆம் தேதி இப்படம் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. அதே நாளில்தான் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள "மெட்ராஸ்" படமும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X