சென்சாருக்கு போயிட்டு அப்படியே திரும்பி வந்த வந்தா ராஜாவாதான் வருவேன் #VRV
சென்னை: சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது.
சுந்தர் சி. இயக்கத்தில் சிம்பு, கேத்ரீன் தெரசா, மேகா ஆகாஷ், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள வந்தா ராஜாவாதான் வருவேன் படம் வரும் பிப்ரவரி மாதம் 1ம் தேதி ரிலீஸாக உள்ளது.

இந்நிலையில் படம் இன்று சென்சார் போர்டுக்கு போட்டுக் காட்டப்பட்டது. படத்தை பார்த்த சென்சார் போர்டு எந்த இடத்திலும் கத்தரி போடாமல் யு சான்றிதழ் வழங்கியுள்ளது.
அதாவது சிம்பு படம் குடும்பத்துடன் பார்க்க உகந்த படம் என்று தெரிவித்துள்ளது சென்சார் போர்டு. வந்தா ராஜாவாதான் வருவேன் ரிலீஸையொட்டி தனக்கு மெகா சைஸ் கட்அவுட்டுகள் வைத்து அண்டாவில் பாலாபிஷேகம் செய்யுமாறு சிம்பு தனது ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
ரசிகர்கள் அண்டாவில் பாலாபிஷேகம் செய்கிறார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Comments


Click it and Unblock the Notifications